குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

திருக்குறள் பேரவை சார்பில் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி பட்டம் !

உலக திருக்குறள் பேரவை சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி பட்டம் வழங்கப்பட உள்ளது. இது குறித்து உலக திருக்குறள் பேரவை தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது குன்றக்குடி அடிகளாரால் துவங்கப்பட்ட திருக்குறள் பேரவை, தற்போது உலக திருக்குறள் பேரவையாக வளர்ந்துள்ளது. திருக்குறளுக்கு எழுத்துப்பணி, சொற்பணி, செயல்வடிவம் அளித்தவர்கள் உண்டு. எழுத்து, சொல், செயல் என்று ஒருங்கிணைத்து திருக்குறள் பணியாற்றியவர், பணியாற்றுபவர் நமது தமிழக முதல்வர் கருணாநிதி என்றால் அது மிகையல்ல.

திருவள்ளுவருக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி. காரணம், சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமாரியில் திருவள்ளுவருக்கு திருவருவச்சிலை, பெங்களுரில் 18 ஆண்டுகளாக முடக்கப்ட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது,1330 குறள்களை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பொற்கிழி விருது, குறளோவியம், திரு வள்ளுவர் ஆண்டை தமிழ்புத்தாண்டாக அறிவித்தது போன்ற செய்லகள் மூலம் திருக்குறள் மீது கருணாநிதிக்கு உள்ள உள்ளத்து ஈடுபாட்டை காணலாம்.

இதன் மூலம் திருக்குறள் பணியில் வாழ்நாள் சாதனையாளராக கருணாநிதி விளங்கி வருகின்றார். எனவே, இந்த பேரவை மூலம் தமிழக முதல்வருக்கு வரும் 10 ம் தேதி சென்னையில் திருக்குறள் பேரொளி பட்டம் வழங்கப்பட உள்ளது என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.