வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் பட்டியல் குறித்த பிரமாண பத்திரத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இந்த பட்டியிலில் மூன்று தொழிலதிபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவைச் சேர்ந்த நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் அதிபர் டிம்பலோ, ராஜ்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் சிமன்லால் லோதியா, மற்றும் டாபர் இந்தியா நிறுவனத்தின் சேர்மன் பிரதீப் பர்மான் உள்ளிட்ட 3 பேர் சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபர் நிறுவனம் மறுப்பு
கருப்பு பண விவகாரத்தில் டாபர் நிறுவனத்தின் சேர்மன்பிரதீப் பர்மான்ன் பெயர் வெளியாகியிருப்பதற்கு, டாபர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், .பிரதீப் பர்மான் வெளிநாடு இந்தியராக வாழ்ந்த காலத்தில் அவர் வெளிநாடுகளில் பணம் போட்டிருந்தார். இது சட்டப்பூர்வமானதாக உள்ளது. முறையான வரி செலுத்தியதன் ஆதாரங்கள் உள்ளது. மிக பெரிய மதிப்புள்ள குடும்பத்தை சேர்ந்த பர்மானை, தவறுதலாக சித்தரித்திருப்பது கவலை அளிக்கிறது சட்டப்பூர்வமாக அனைத்து விஷயங்களையும் சந்திப்போம், வெளிநாடுகளில் பணம் வைத்திருக்கும் அனைவரையும் கருப்பு பணம் வைததுள்ளவர்கள் என்று கூறுவது துரதிஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளது,
குய ராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் சிமன்லால் லோதியா,. தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது பெயரில் சுவிஸ்சில் எந்தவொரு கணக்கும் இல்லை. மத்திய அரசின் பட்டியலில் தனது பெயர் இருந்தது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது, இதுதொடர்பாக. ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கருப்பு பண விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ், மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் பெயர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் 3 தொழிலதிபர்களின் பெயர் மட்டும் வெளியிடப்பட்டிருப்பது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.