குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 6 ம் திகதி புதன் கிழமை .

டேவிட் கமரூனுக்கு விழும் அடுத்த அடி. 1.7 பில்லியன் கட்டவேண்டும் !

26.10.2014 - இங்கிலாந்து வாழ் ஒவ்வொருவர் தலையிலும் மேலும் ஒரு சுமை தூக்கி வைக்கப்பட உள்ளது. ஆம் ஐரோப்பிய ஒன்றியம், 1.7 பில்லியன்(1700 மில்லியன்) பவுன்டுகளை ஒன்றியத்திற்கு செலுத்துமாறு இங்கிலாந்தைக் கோரியுள்ளது.

இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் முற்று முழுதாக இணையவில்லை. இருப்பினும் ஒரு ஐரோப்பிய நாடு என்ற வகையில் அதில் அங்கம் வகித்து வருகிறது. இன் நிலையில், பல ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்கள் நட்டத்தில் ஓடுகிறது. பெரும் பொருளாதார வீழ்ச்சியும் காணப்படுகிறது. இதேவேளை பிரான்ஸ் நாடே மிகவும் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து 1.7 பில்லியன் பவுன்டை கட்டவேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

 

அதாவது இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவ்வொரு நபர் தலையிலும் சுமார் 56 பவுன்டுகள் அறவிடப்படவுள்ளது. அப்படி அறவிட்டால் தான் இந்தக் காசை சேர்த்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கட்ட முடியும். இதேவேளை நமது நாடு நட்டத்தில் ஓடுவதாக கணக்கை காட்டி பிரான்ஸ், யேர்மனி, டென்மார்க், போலந்து போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். அத்தோடு இந்த நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட சில கடன்களையும் ஐரோப்பிய ஒன்றியம் ரத்துச் செய்கிறது. நாம் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்து இருக்கவேண்டுமா என்ற முடிவை எட்டும் அளவுக்கு எங்களை தள்ளவேண்டாம் என்று கோபமடைந்த கமரூன் தெரிவித்துள்ளார்.

மக்கள் தலையில் இவ்வளவு தொகையை திணிக்க தம்மால் முடியாது என்று கமரூன் நேற்று நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க அடுத்த வருடம் பொதுத் தேர்தல் வேறு வரவுள்ளது. இன் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த கோரிக்கையை ஏற்பதா இல்லையா என்று பெரும் சிக்கலில் மாடிக்க்கொண்டு தவிக்கிறார் டேவிட் கமரூன். ஏற்கனவே பல போலந்து நாட்டவர்கள் பிரித்தானியாவுக்கு படையெடுத்து வந்துள்ளார்கள்.

அவர்களில் பலர் அரச சலுகைகளை நன்றாகப் பாவிக்கிறார்கள். அதிலும் சிலர் , சிறுவர்களுக்கான உதவிகளை எடுத்துக்கொண்டு தமது பிள்ளைகளை போலந்து நாட்டில் வைத்து படிப்பிக்கிறார்கள். ஆனால் லண்டனில் பிள்ளைகள் இருப்பதாக கூறுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இருப்பதால், இங்கிலாந்திற்கு எந்த நன்மையும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக பல நாடுகள் பிரித்தானியாவை பாவிக்கின்ற நிலைதான் தோன்றியுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.