குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

அரைநுாற்றாண்டைத்தாண்டி ஓராண்டைக்கடக்கின்றேன்.

அரைநுாற்றாண்டைத்தாண்டி ஓராண்டைக்கடக்கின்றேன்.

காடுகள் கானகங்களில் நடந்தேன் ஆறுகள் குளங்களில்

அள்ளுண்டு போகாது எதிர்நீச்சல்கள் போட்டேன்.

நட்பெனும் சிறைகளில் அடைபட்டேன்.சிறைகள்என்னை

விடுவித்தபோதும் சிறைகளைக்காதலித்தேன் மனங்களில்

விலங்குகளைப் மாட்டினேன்.

 

மொட்டாகி மலராகி  மணம்வீசித்திரிந்தேன் நலன்கள்

பல துறந்தேன் மாளிகைகளில் படம்பார்ப்பதை  தவிர்த்தேன்.

மனதில் படங்கள்  தயாரித்தேன். நாடகங்கள் நடடித்தேன்.

 

உண்மையில் நான் சிங்கங்களை  புலிகளைக்கண்டு அஞ்யதுமில்லை.

என்வாழ்நாளில் ஒவ்வொரு படிக்கல்லும் சிங்கம் புலி கரடி நரிகள் கொடிய

பாம்புகள் இவைகள் மீது ஏறி ஏறி மீண்டு மீண்டு அரை நுாற்றாண்டைத் தாண்டி

மகிழ்கின்றேன். உடலில்கயங்கள் ஏதுமில்லை என் இதயத்தை பிழிந்த பேய்கள்

 

மனிததோல் போர்த்த தேழ்கள் கொடியவால்களால்  கொட்டின பற்களால் கடித்தன

எனக்கோ சிரிப்பாய் வரும் மனிதராய் ஒருவன் இருந்தால் தேழ்கள் கொட்டுவதை

தாங்கத்தெரிந்தவன் தான் மனிதனாய்  இருக்கமுடியும். வேட்டைத்திருவிழாவே

வேடர்விழாவாகவும் மாநாடுகளாகவும் நடந்தேறின காட்டேரிகள் கூச்சல் காதுகளைக் கிழித்தன.

 

என்மனம் பனியாய் இறுகியதும் உண்டு பனியாய் உருகியதும் உண்டு

நடித்துள்ளேன் ஆனால் வேடங்கள்  நான் போடுவதில்லை.

என்காலடிகளோடு எட்டிவைத்துபார்த காலடிகள் களைத்தன கரைந்தன.

தொடர்ந்து நடப்பதால் என்கால்கள் உறுதி பெற்றன.

 

உறுதிமிக்கநடை தொடரும் எத்திசை தொடரும் என்பதை

என்மனத்திசை தீர்மானிக்கும் பக்குவம்  மிக்கமனங்கள்

என்தடங்களில் பட்டையங்கள் தீட்டின வசந்தமாய் வந்தன

தங்கமான மனங்கள் என்னை என்றும் தாலாட்டியது உண்டு.

 

மலையால்  உருட்டினாலும் வெருண்டு  போய்விட

அரைகுறை  ஆசன்கடளிடம் நான்வளர்ந்துவிடவில்லை.

ஆலையில்லா கச்கரையுமில்லை நடுஇரவுக்குடையுமில்லை.

சிட்டாய் பறக்கும் குருவி செவ்வாக்கும்  போகும் வளியுண்டாயின்.