குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

மகாத்மா காந்தியின் எஞ்சியுள்ள அஸ்தி தென்னாபிரிக்காவில்

இலா காந்தி- காந்தியின் பேத்தி1948 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் அஸ்தியை பல நாட்டு அரசுகளின் சார்பில் அவற்றின் தலைவர்கள் தத்தமது நாடுகளுக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அப்போது தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கொள்கையை கடைப்பிடித்த அரசாங்கம் ஆட்சியில் இருந்ததால் அந்த அஸ்தியை அந்நாட்டு அரசாங்கம் பெற்றுக் கொள்ளாமையால் அங்குள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் காந்தியின் அஸ்தி அங்கே கொண்டுசெல்லப்பட்டது.

காந்தி தென் ஆப்ரிக்காவில் 21 ஆண்டுகள் வாழ்ந்ததால் அவரது அஸ்தியின் ஒருபகுதியை அங்கே அனுப்புவதற்கு இந்திய அரசும் ஒப்புக்கொண்டது. அப்படி கொண்டுவரப்பட்ட காந்தியின் அஸ்தி அவர் தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அப்படி வைக்கப் பட்டிருந்தபோது, விலாஸ் மெஹதா என்கிற காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான நண்பர் அந்த அஸ்தியிலிருந்து ஒரு பகுதியை எடுத்து காந்தியின் நினைவாக தம்மிடம் வைத்துக் கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். இறக்கும் தருவாயில் இந்த அஸ்தியை அவர் தமது மருமகளிடம் கொடுத்து அதை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அந்த அஸ்தியை சில ஆண்டுகாலம் வைத்திருந்த அந்த மருமகள் அதனை காந்தி குடும்பத்திடம் கையளித்துள்ளார்.

காந்தியின் அஸ்தியை கண்காட்சியிலோ அல்லது தனிநபர்களிடமோ வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அதை கடலில் கரைப்பது தான் சரி என்றும் முடிவு செய்யப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை அஸ்தி கடலில் கரைக்கப்படவுள்ளது.

தென் ஆப்ரிக்க கடற்படையின் வாகனத்தில் அஸ்தியுடன் தாமும் உடன் சென்றுகடலில் கரைக்கவுள்ளதாகவும் இது முழுமையான அரசு மரியாதையுடன் செய்யப்பட இருப்பதாகவும் தென்னாபிரிக்காவிலுள்ள காந்தியின் பேத்தியான இலா காந்தி கூறினார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.