குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 12 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

எம்மிடமில்லாத மானிடத்தைப் பெற்றிடுவோம்.

ஆற்றல்  பெற்ற  சக்தியை  ஆண்டவனாக

முற்கால  மனிதன்  உருவாக்கினான்.

கற்காத மனிதனிடமும்   முற்காலத்தில்

மானிடமிருந்தது.

கற்சிலைக்குள்ளம்    கடவுள்    சக்தியிருந்தது

தற்காலத்தில்   மானுடத்தை    விற்று விட்ட

உருவங்கள்    நடமாடி    ஆண்டவனை   வியாபாரியாக்கி

பொற்சிலை   வைத்தாலும்  பொன்  என்ற  உயர்வே   அன்றி

 

ஆற்றல் கொண்ட ஆண்டவன்  எங்கே ?

உருவமற்ற   ஆண்டவனுக்கு

விரும்பிய படியே  தோற்றம்   கொடுத்து

ஒருமை    பெற்ற      சக்திக்கு

வேற்றுமைத்     தத்துவம்     சொல்லி-

 

 

மதமாக்கிய  மனிதனிடம்  அற்று விட்ட  -

மானிடம்     பெற்றுவிட்டால்

மனங்களில்   தலங்களில் திருத்தங்கள்

வந்துவிட்டால்  என்றோ   ஆண்டவன்    -

மூடிய   கண்ணை    விழிப்பான்,

உலகமே     நன்மை    பெறும்.

 

அற்புதன்  ஆண்டவனுக்கு   தமிழெழுத்து -  மலர் துாவி

தமிழச்    சொல்தொடுத்து     கவிமாலை  சாத்தி வழிபட்டு,

பெற்றிடுவோம்    எம்மிடமில்லாத  மானிடத்தை.

 

பூநகரி பொ.முருகவேள் ஆசிரியர்,சுவிற்சர்லாந்து.01.08.2008-