குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

துாய்மைப் பணியாற்றும் துாயவன்- தமிழாலயம்-தமிழ்நாடு.

 

அறிவியலை      முட்டிப்        பறக்கின்றேன்

என்று  எண்ணுகின்றான்.

 

பட்டப்படிப்பை   சட்டையாய்ப்போட்டு

பணத்தைக்  குவிக்கத்  துடிக்கின்றான்.

 

அடிப்படைத்  துாய்மைப்  பழக்கத்தை

அடியோடு   சாய்க்கின்றான்.

 

 

வீதியைப்பெருக்கும்       பெருமகனை

சாக்கடை     பேணும்    நல்லவனை

விடியலில்  காணக்கூடாதெ  ன்று

சாக்கடைக்   கதைகள்சொல்லி   தாம்  மேலோர் என்பர்.

 

தீண்டத்  தகாதவன் என்று

பெயர்   பெற்றவன்    எவன்?

தலைமுடி     அலங்கரிப்பவன்

சலவை  செய்பவன்   மனிதனுக்கு

சேவை   செய்பவன்.

எதையும்     துாய்மையாய்ச்   செய்யத்

துணிந்த  மனிதனே  துாய  மனிதன்.

 

துாய்மையை   அழகை   விரும்புகின்றான்!

ஒன்றே குலம்  என்பது  வாழ்கின்றது

என்றே  தமிழ்   அன்னை மகிழ்வாள்

அன்றே  உலகத்தோர்   தமிழரை

மனிதரென்று  எண்ணத்  தலைப்படுவார்.

 

பூநகரி பொ.முருகவேள் ஆசிரியர்,சுவிற்சர்லாந்து.01.08.2008-தமிழாலயம்.