குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்களே

இலங்கையில்  தமிழர்  சனநாயகவழியில் நின்றவர்கள் என்பதை இந்தநேரத்தில் நிகழ்த்திக்காட்டவேண்டும்.  முதலில்  வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்களே. சோழர்காலத்தில் மன்னரைத்தெரிவு செய்வதற்கு ஓட்டில் அல்லது கல்லில் பெயர்களை எழுதிப்போடுவார்கள் ஒருதினத்தில் எடுத்து எண்ணுவார்கள் அதிகம் பெறுபவர் நிர்வாகத்திற்கு தெரிவு செய்யப்படுவார் இதுவேசனநாயகத்தின் ஆரம்பம். உலக அரங்கில் தமிழர்கள் சனநாயகவிரும்பிகள்  என்பதை இக்காலகட்டத்தில் நிருபிக்கவேண்டும். இதன்மூலம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்களுக்கான மதிப்பு உயரும்.
 
                        செவ்வாய்க்கிழமை தமிழர்பகுதியில் 75 விழுக்காடுமுதல் 80 விழுக்காடுவரை வாக்குப்  பதிவாகவேண்டும். அதிர்ச்சியுடன் மற்றவர் எம்மை நோக்கவேண்டும். சனநாயகவழியில்  நம்பிக்கை வைத்தவர்களை சிங்களஅரசு ஏமாற்றியதாலேதான் தமிழர்கள் போராடப் புறப்பட்டனர்  என்பதை உலகத்திற்கு விளங்கவைக்கவேண்டும். வெளிநாடுகளில் பலவிதமான மனநிலை தமிழகத்தில் வேறுவிதம் ஆனால் இலங்கையில் தற்போதைய  நிலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்றநிலையில் இலங்கைத் தமிழ்மக்கள் உள்ளனர்.

                           இடம்பெயர்ந்த மக்களுக்கு எவ்வாறான உதவிகள் எப்படி எப்படி கிடைத்தன என்பதை அம்மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் பெரிதும் உதவின இதைமறைமுகமாகவும்  நேரடியாகவும் சிலர் தடுத்தனர் இத்தடையை இப்போது அகற்றவேண்டும்.

இது இப்போ தமிழர் கையில். வேட்பு மனுதாக்கல்  நிகழமுன்னரே ஒரு கட்டுரை    மூலம் எழுதினேன். தமிழர்கள் இலத்திரனியல்  உலகைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும் இத்தேர்தலில் என்பதை.. இதை சிங்களவர்கள் செய்துள்ளார்கள்  . தமிழர்கள் மேடையென்றும் கூட்டம் என்றும் அலைந்தோம்.

கைத்தொலைபேசி குறுந்தகவல் பிரச்சாரம் மின்அஞ்சல் பிரச்சாரம் நிகழவில்லை ஆனால் சினிமா தொடர்நாடகங்களுக்கு குறையில்லை இப்படியிருந்தால் நாம் பழந்தமிழராய்  அமிழ்ந்து போகவேண்டியதுதான். இத்தேர்தல் மூலம் சனநாயகவிரும்பிகள் தமிழர்கள்  என்பதை உலகத்திற்கு  காட்டிவிட்டு அடுத்து  சரத்வென்றால் திறமைமிக்க  இரணிலையும் சரத்தையும் விமல்வீரசிங்கவையும்(யே.வி.பி) அய்யும் அரசியல் ரீதியாக வெற்றிகரமாககையாள்வதற்கு நாம் தயாராகவேண்டும். தற்போதைய தலைமை வென்றாலும் அதைக்கடினமான முறையிலேதான் கையாளவேண்டும். இது இன்னுமொரு முள்ளிவாய்க்காiலை தென்னிலங்கையில் கூடஉருவாக்கி முடிக்கும். தன்னப்பம் தன்னைச்சுடும்  ஓட்டப்பம் வீட்டைச்சுடும் என்பது தமிழர் வாக்கு.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.