குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

தவறான ஆட்சியை அகற்றி ஒதுக்கிவிட கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அறைகூவல்

ஒவ்வொருவரும் தமது வாக்கை அச்ச மின்றி அளிக்கும் வகையில் நீதியான, நேர்மையான தேர்தல் நடந்தேறுவதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்யவேண்டும்.

ஒவ்வொருவரும் தமது வாக்கை அச்ச மின்றி அளிக்கும் வகையில் நீதியான, நேர்மையான தேர்தல் நடந்தேறுவதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்யவேண்டும்.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க செவ்வாய்கிழமை நடை பெற்ற வுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் விவரம் வருமாறு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கா நேற்று தாம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பவை வருமாறு:
அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் என்னை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியமையால் எனது நான்கு வருட மௌனத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்ற தீர்மானத்துக்கு  நான் வந்துள்ளேன்.
தற்போது இடம்பெறும் வன்முறைகள், சட்டம், ஒழுங்கு சீர்குலைவு ஆகியன ஜன நாயகம், ஜனநாயக நிறுவகங்கள், விழு மியங்கள் ஆகியவற்றுக்கும் கடந்த நூற் றாண்டுகளாக பல தியாகங்களையும் அர்ப் பணிப்புக்களையும் செய்து பேணிப்பாது காத்து வந்த அடிப்படைச் சுதந்திரத்துக் கும் பெரும் சவாலாக வந்துள்ளன.

இந்த விழுமியங்களை நிலைநிறுத்தி உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்தையும் ஆற்றவேண்டியது அர சாங்கத்தினதும், நாட்டினதும், அரச தலை வர்களினதும் புனிதமான கடமை என நான் உறுதியாகக் கருதுவதோடு எனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் அதனை செயலில் வெளிப்படுத்தியும் வந்துள்ளேன்.
அரசாங்கமும் அதன் தலைவர்களும் தமது வழிகாட்டல் உத்தரவுகளை அப்பட்டமாக மீறுவார்கயேயானால், தாம் தமது பொறுப்பிலிருந்து பின்வாங்கி விடுவார் என தேர்தல் ஆணையாளர் முன்னெப்போதுமில்லாதவாறு விடுத்த அறிவிப்பு,  எமது மௌனத்தை கலையும் விதத்தில் எமக்கு அதிர்ச்சியைத் தந்து நிற்கின்றது.

ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தினால் நிறுவி உருவாக்கப்பட்ட ஓர் அரசைத்தவிர சிறந்த முறைமை வேறெதுவும் இருக்கமாட்டாது என்பது எனக்குத் தெரியும். (கடந்து சென்ற பல நூற்றாண்டு கால மனித வரலாற்றில் மனித குலத்துக்கு ஜனநாயக அரசுகளே பிரகாசத்தையும் முன்னேற்றத்தையும் வழங்கியிருக்கின்றன). இது சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதுடன் சம்பந்தப்பட்டது அதாவது ஒரு நாட்டின் சட்டக்கட்டமைப்புக்கு உட்பட்டு சிந்திக்கவும், அந்தச் சிந்தனையை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், சுதந்திரமாக செயற்படவுமான உரிமையாகும். அத்தோடு தங்களை ஆட்சி செய்பவர் யார் என்பதை நீதியான, நேர்மையான தேர்தல் மூலம் தெரிவு செய்வதற்கான சுதந்திரத்துடனும் அது சம்பந்தப்பட்டது. இந்த உரிமை ஆட்சியில் உள்ளவர்களால் வேண்டுமென்றே மறுக்கப்பட்டு மீறப்படுமானால் அது தேசத்தின் சாவு மணியை ஒலிக்கச் செய்யும் வேலை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
பின்வரும் நடவடிக்கைகளை விரைந்து நேர்மையுடன், பயன்தரும் விதத்தில் மேற்கொள்ளுமாறு சுதந்திரம், நீதி, மனித கௌரவம், நற்பண்பு ஆகியவற்றை மதிக்கும் எனது நாட்டின் சக பிரஜைகளோடு சேர்ந்து நான் அரசாங்கத்தைக் கோருகின்றேன்.தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டும்

* அதிகரித்து வரும் வன்முறைகளை நிறுத்தச் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட தரப்புக்கும் உத்தரவிடுதல்.

*  தேர்தல் சட்டங்களின் படி தேர்தல் ஆணையாளர் விடுக்கும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டுச் செயற்படுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தல். இது, அரச சொத்துக்களையும் அரச ஊழியர்களையும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக துஷ்பிரயோகம் செய்வதை உடன் முடிவுக்கு கொண்டு வருதல், வாக்களிப்பு அன்றும் அதன் பின்னரும், அச்சுறுத்தல்,  அடாவடித்தனங்கள் இடம்பெறாமல் நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றையும் உள்ளடக்கும்.

* ஜனாதிபதியும் அவரது அரசும் தங்கள் கடமைப் பொறுப்பை நேர்மையுடன் ஆற்றினால் இது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல.
எனது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அனைத்து உறுப்பினர் களிடமும் கட்சியின் உண்மையான இலட்சியங்களில்பண்டாரநாயக்கா கொள் கைகளில்உறுதியாக இருக்குமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இவற்றில் முக்கியமானவைஅடிப்படை மனிதஉரிமைகளை மதித்தல், ஒழுக்கமும்அகிம்சையும், நேர்மை மற்றும் ஊழலற்ற தன்மை ஆகியனவாகும். இவற்றை பலமான அத்திவாரக் கட்டமைப்பாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்ட நமது கட்சி, அதனால் எமது மக்களின் செல்வாக்கையும், நம்பிக்கையையும் பெற்று நீண்ட காலம்  அரசில் உள்ளது.

ஒவ்வொருவரும் தங்கள் வாக்கை அச்சமின்றி அளிக்கும் வகையில் நீதியான நேர்மையான தேர்தல் ஒன்று நடந்தேறுவதற்குத் தேவையான அனைத்தையும் அடுத்த சில நாள்களுக்குள் நாங்கள் செய்வோமாக!
கடந்த நாற்பது வருடங்களாக பல இருண்ட, நெருக்கடியான நேரங்களை எமது தேசம் கடந்து வந்திருக்கின்றது. இன்று எங்கள் லங்கா தேசத்திலிருந்து விரோத சக்தி, சகிப்புத்தன்மையின்மை, சமத்துவமின்மை, பொய், ஊழல், குடும்ப ஆதிக்கம், தவறான ஆட்சி ஆகியவற்றை அகற்றி ஒரு மாற்றத்தை நோக்கி செல்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பு இன்று கிடைத்திருக்கின்றது.

நாங்கள் சேர்ந்து நட்சத்திரத்தை எட்டுவோமாக. நீங்களும் நானும்  எங்கள் பிள்ளைகளும் அதற்கு தகுதியுடையவர்களேஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி-(அசி)

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.