குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

செம்மொழி மாநாடு: கலைஞர் பேட்டி

கோவையில் வருகிற ஜுன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 5 நாட்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த முதல்-அமைச்சர் கருணாநிதி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார். இந்த நிலையில், இந்த மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் குழு தலைவர்களின் ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்று மாலை நடந்தது. மாலை 4.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது.

இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி, பரிதி இளம்வழுதி, எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, வெள்ளக்கோயில் சாமிநாதன், கவிஞர் கனிமொழி எம்.பி. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
ஆலோசனை கூட்டம் முடிந்ததும், முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து ஆராய்ந்திடவும், ஆக்கப் பணிகளை முடுக்கிவிடவும், தலைமைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. கோவையில் மாநாடு நடைபெறுகிற கொடிசியா அரங்கில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முன்னேற்றம் பற்றி இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
 
ஆய்வரங்கம் நடத்துவது தொடர்பான பணிகளின் முன்னேற்றம் பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டது. மாநாட்டின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களுக்கு அழைக்க வேண்டிய சிறப்பு விருந்தினர்களைப் பற்றி முடிவு செய்யவும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. மாநாட்டிற்கான இடவசதி, வடிவமைப்பு தொடர்பாகவும் முடிவு செய்யப்பட்டது.


பொது அரங்க நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்குவது பற்றியும் இந்தக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. 2 மற்றும் 5-வது அரங்கில் அமைக்க வேண்டிய பகுதிகள், அதன் அளவு ஆகியவை தொடர்பாக தக்க முடிவு செய்து ஆலோசனைகள் வழங்குவது என்றும் அதற்காக இந்த தலைமைக் குழு பல குழுக்களோடு தொடர்பு கொண்டு பணிகளை ஆற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
 
தமிழ் இணைய மாநாட்டையொட்டி கண்காட்சி அரங்கம் அமைக்கவும் இந்த கூட்டத்திலே முடிவு செய்யப்பட்டது. ஊர்வலம் நடத்துவது தொடர்பாக ஊர்வலப் பாதை, கருப்பொருள் ஆகியவை பற்றியும் முடிவு செய்யப்பட்டது. மாநாட்டு நிறைவாக தபால்தலை வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்புவது பற்றியும் முடிவு செய்யப்பட்டது.


ஆய்வரங்கம் மற்றும் பொது அரங்கில் கலந்து கொள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்களை அழைப்பது தொடர்பாகவும் விவாதித்து முடிவு செய்யப்பட்டது. மாநாட்டுக்கு அழைக்கப்படும் அறிஞர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் ஆகியோருக்கு அளிக்கப்பட வேண்டிய வசதிகள் தொடர்பாக முடிவு செய்யப்பட்டது.
 
மாநாடு தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள சில குழுக்களின் பொறுப்புகள், பணிகளை வரையறுத்து முடிவு எடுக்கப்பட்டது. தங்குமிடம் ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் ஆய்வு செய்து, அதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.


உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்தியா உட்பட 41 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 2 ஆயிரத்து 803 பேர் இதுவரை பதிவு செய்து உள்ளனர். இந்தியாவில் இருந்து 2 ஆயிரத்து 430 பேர் பதிவு செய்து இருக்கிறார்கள்.
 
மலேசியாவில் இருந்து 102 பேரும், இலங்கையில் இருந்து 74 பேரும், சிங்கப்பூரில் இருந்து 69 பேரும், ஐக்கிய அமெரிக்காவில் இருந்து 32 பேரும், இங்கிலாந்தில் இருந்து 13 பேரும், கனடாவில் இருந்து 11 பேரும், ஆஸ்திரேலியாவில் இருந்து 10 பேரும், ஜெர்மனியில் இருந்து 8 பேரும், பிரான்சில் இருந்து 5 பேரும், ஐக்கிய அரபு எமிரேட், ஓமன், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தலா 4 பேரும், அயர்லாந்து, நெதர்லாந்து, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா 3 பேரும், ஜப்பான், தென் கொரியா, நார்வே ஆகிய நாடுகளில் இருந்து தலா 2 பேரும், அமெரிக்க சமோயா, ஆஸ்திரியா, இத்தாலி, இந்தோனேஷியா, ஈரான், எத்தியோப்பியா, கஜகஸ்தான், கத்தார், கென்யா, சீனா, செர்பியா, செக் குடியரசு, சைசிலாஸ், சுவிட்சர்லாந்து, டோங்கோ, துனிஷியா, நியுசிலாந்து, புருனே, பார்படோஸ், ரஷியா, வங்காள தேசம், ஹாங்காங் எஸ்.ஏ.ஆர்., ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவரும் ஆக மொத்தம் வெளிநாட்டவர்கள் 373 பேர் பதிவு செய்து உள்ளனர். இதுவரை வந்துள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை ஆயிரத்து 168.


இந்த மாநாடு 23-6-2010 அன்று மாலை ஊர்வலத்துடன் ஆரம்பம் ஆகிறது. மாநாட்டை இந்திய குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்க இசைவு தந்துள்ளார’’என்று தெரிவித்தார்.
நன்றி.இணையம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.