குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தேர்தல் வன்முறைகள் குறித்து ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கவனம்

தேர்தலுக்கு முன்னரான வன்முறைகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஐ.நா செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வெவேறான அறிக்கையில் தெரிவித்துள்ளன. இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை வன்முறையற்ற முறையில் நடாத்துவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

அமைதியான காலப்பகுதியில் நடைபெறும் முதலாவது நாடு தளுவிய தேர்தல் நீண்ட கால அமைதியையும் சமாதானத்தையும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஐ.நா செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை பணிப்பாளர் கத்தரின் அஸ்டன் தனது அறிக்கையில்,இலங்கையில் தேர்தலுக்கு முன்னரான வன்முறைகள், மரணங்கள் குறித்து கவன செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னரும் அதற்கு பின்னரும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள அவர் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் நீண்டகால சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் வன்முறைகளற்ற தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இரண்டு பிரதான தரப்பினருக்கும் இடையிலான முறுகல்களினால் வாக்களிப்பில் சகலரும் கலந்து கொண்டு தங்களது அபிலாஷைகளை வெளிப்படுத்துவார்களா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.