குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, ஆனி(இரட்டை) 26 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

டென்மார்க்கில் குறைந்த வயதில் ஓய்வூதியம் எடுப்போர் தொகை அதிகரிக்கிறது !

டென்மார்க்கில் குறைந்த வயதிலேயே ஓய்வூதியம் பெறுவோர் தொகை அதிகரித்து வருவதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடி,வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணிகள் வயது கூடியவர்களை ஓய்வூதியத்தின் பக்கமாக விரட்டிக் கொண்டிருப்பதால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைத்தகமை உள்ள பல பெரியவர்களை இழந்துவிடும் அபாய நிலையில் டேனிஸ் வேலைச்சந்தை இருப்பதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது. தற்போது 67 வயது ஓய்வூதிய வயதாக இருந்தாலும் சராசரியாக 63.5 ஓய்வூதிய வயதாக இருக்கிறது. ஓய்வூதியம் பெற விரும்புவோரை பதவிகளில் இருந்து விலக விடாது கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கு என்ன செய்யலாம் என்று பல தரப்பினரிடமிருந்து ஆலோசனை பெறப்பட்டு வருகிறது. முதியோருக்கான வேலை நேரத்தை 20 மணி நேரமாகக் குறைத்து, ஐந்து வாரம் விடுமுறை வருடத்தில் வழங்கலாம் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது. கடந்த 1998 ல் இருந்து 2008 வரை டென்மார்க்கில் பல கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன. 1999 ஏப்ரலுன் சீர்திருத்தம், 2003 முன்னைய ஓய்வூதிய சீர்திருத்தம், 2004 பென்சனுக்கு போகாமலிருக்க விசேட சலுகை என்று பல வழிகளிலும் அரசு போராடினாலும், போதுமடா சாமி என்ற குரல்களே பரவலாகக் கேட்கிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.