குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

கோத்தபாயாவும் நாட்டைவிட்டு வெளியேறினாரா ?

சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தலில் நெருங்கிவரும் போது எதிர்பாராத சம்பவங்கள் பல நடைபெறுமென எதிர்பார்க்கபடுகையில், திடீரென சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு  மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அவர் உடனடிச்  சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கொழும்புச் செய்திகள் சில தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை மாத்தளைப் பகுதியில்  நடைபெற்ற பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள சென்ற போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும்,  இதையடுத்து அவர் உடனடியாக,  கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்,  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்  என அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில்  அவருக்கு உடனடிச் சிகிச்சை அளித்த இருதய சிகிச்சை நிபுணர்கள்  கோத்தபாயவை மேலதிக சிகச்சைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கத் தெரிவித்த  ஆலோசனைப்படி அன்று  இரவே அவர் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டடுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளது பலத்த சந்தேகங்களளை எழுப்புவதாகவும்  அச் செய்திகள் தெரிவிக்கின்றன.   தேர்தலில் பொன்சேகா வெற்றி பெறக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதை அவதானித்து, வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல நடத்தப்பட்ட நாடகமாக இது இருக்கலாம் எனவும் அச்ட செய்திகளில் ஊகம் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரத்தில் கோத்தபாயாவின் மனைவி வெளிநாட்டுக் சென்றிருப்பதாகச் செய்திகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.