டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…. ரூபாய் மதிப்பு சரிவு இந்தியாவிற்கு புதிதது அல்ல என்று கூறினார். வளர்ச்சி அடையும் நாடுகள் இதுபோன்று சரிவை சந்திப்பது சகஜம் தான் என்று கூறிய சிதம்பரம், தென் ஆப்ரிக்கா, பிரேசில், துருக்கி போன்ற நாடுகளும் சரிவை சந்தித்து இருக்கிறதுஎன்று கூறினார்.
பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
குறிப்பாக நிதி ஒருங்கிணைப்பு, மிதமான பண வீக்கம் ஆகியவற்றில் நல்ல பலன் ஏற்பட்டுள்ளதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார். பற்றாக்குறையை குறைக்க தங்கத்தின் மீதான இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியம்என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் கைவிட வேண்டும் என்று கூறியுள்ள சிதம்பரம், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் மாட்டு தொழுவத்தில் கட்டி வைத்திருந்த எருமை ஒன்று சாணம் போட்டது. எருமை சாணம் போட்டதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கலாம். எருமை சாணத்துடன் செல்போன் ஒன்றும் வெளியில் வந்து விழுந்தது.
பாகல்கோட்டை ஹொசரொள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வர தொட்டகாரா. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாட்டு தொழுவத்தில் கால்நடைகளுக்கு தீவனம் போட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராமல், இவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் வீட்டில் செல்போனை தேடியுள்ளார். அது கிடைக்கவில்லை. உடனடியாக வேறு செல்போன் மூலம் தனது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ரிங்டோன் மட்டும் சத்தம் குறைவாக கேட்டுள்ளது.
நாள் முழுவதும் தேடியும் செல்போன் கிடைக்காததால், வேறு செல்போன் வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார். இதனிடையில் நேற்று வழக்கம் போல், மாட்டு தொழுவத்திற்கு சென்று கால்நடைகளுக்கு தீவனம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது, தொழுவத்தில் இருந்த எருமை ஒன்று சாணம் போட்டது.
அதை சேகரிப்பதற்காக கையில் அள்ளியபோது, அதனுடன் செல்போன் வந்துள்ளது. அதை கழுவி பார்த்தபோது, 7 மிஸ்டு கால்கள் பதிவாகியுள்ளது தெரியவந்தது. இதை பார்த்து ஈஸ்வர தொட்டகார ஆச்சரியத்தில் மூழ்கினார்.
பிளாஸ்டிக் கவர் போடப்பட்டிருந்த செல்போனை தீவணத்துடன் சேர்த்து எருமை தின்றுள்ளது தெரியவந்தது. இதில் ஆச்சரியம் ஒரு நாள் முழுவதும் எருமையின் வயிற்றில் இருந்தும், தண்ணீர் உள்ளே செல்லாமல், செல்போன் நன்றாக இயங்கியது தான். இதை அதிசயத்துடன் கிராமத்தினரிடம் காண்பித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் விவசாயி