குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

ஈழத்தமிழருக்கு நல்லதொரு தீர்வைத்தாருங்கள்; இந்தியாவிடம் சம்பந்தன் பகிரங்கக் கோரிக்கை

யாழ்.நகரில் நடத்தப்பட்ட தமிழரசுக் கட்சி மாநாட்டில் விடுத்தார்

இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம். எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு, அவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவவேண்டும் என்று  எமது மக்கள் சார்பாக இந்தியாவிடம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லிக்கு எனது நண்பர்கள் சிலருடன் சென்று தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளேன். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டில் சிறப்புரையாற்றுகை யில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

சர்வதேசப் பங்களிப்பு குறித்து இங்கு கருத்துக்கூறுவது பொருத்தம் எனக் கருதுகின்றேன். 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்  இனப்படுகொலை நடைபெற்றபின் சர்வதேச சமூகம் எமது விடயத்தில் மிகவும் அக்கறை காட்ட ஆரம்பித்தது. இந்தியா கூடுதல் பங்களிப்புச் செய்தது.

துரதிர்ஷ்டவசமாக ஒரு காலகட்டத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் இடம்பெற்ற விடயங்கள் குறித்துப் பேச வேண்டிய அவசியமில்லை. இந்தியா ஒதுங்கிவிட்டது. அவர்கள் ஒதுங்கியதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஏனைய நாடுகளைப் பொறுத்தமட்டில் ஓரளவு அக்கறை காட்டி வந்தார்கள். அவர்களின் பங்களிப்பு பரிபூரணமானதாக இருந்ததாகக் கூறமுடியாது. பல நாடுகளின் நிலைப்பாடு, இந்தியா என்ன செய்கின்றதோ அதன் பின்னால் நிற்போம் என்பதாகும். பல நாடுகளின் ராஜதந்திரிகள், வெளிநாட்டுத் தலைவர்கள் இங்கு வரும்போது அவர்கள் கூறுவது என்னவென்றால் இந்தியா பங்கெடுக்க வேண்டும்; நாங்கள் உதவியாக இருப்போம் என்பதாகும்.

இதை இந்தியாவிற்கு நாங்கள் பலதடவைகள் எடுத்துக்கூறி வந்துள்ளோம். தற்போது இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக்காண்கிறோம். தமிழர் பிரச்சினை தொடர்பாக தங்களின் பங்களிப்பைச் செய்து நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து அவர்கள் மத்தியில் வளர்ந்து வருவதை அவதானிக்கின்றோம்  நானும் எனது நண்பர்கள் சிலரும் எதிர்வரும் இரண்டு மூன்று நாள்களுக்குள் புதுடில்லிக்குச் செல்லவிருக்கின்றோம். எமது மக்கள் சார்பாக இந்தியாவுக்கு ஒரு விநயமான வேண்டுகோளை விடுக்கவிரும்புகின்றோம். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்குஅவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவுங்கள் என்று எமது மக்கள் சார்பாக பகிரங்கமாகக் கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன்.
நன்றி.உதயன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.