குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 6 ம் திகதி சனிக் கிழமை .

அமரர் வேலுப்பிள்ளைக்காக இரங்கல் உரையாற்றிய இடதுசாரி முன்னணி உறுப்பினர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகளின் பின்னர் அஞ்சலி உரையாற்றிய இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்த இறுதி கிரியை நடைபெற்ற போது, இரங்கல் உரையாற்றிய இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் லங்காபேலியே கைது செய்யப்பட்டவராவார்.

அவர் உரையாற்றும் போது சம்பவ இடத்துக்கு வந்த வல்வெட்டித்துறை பிரதேச பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, அவர் சிங்களத்தில் மக்களுக்குள் உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி கைது செய்துள்ளார்.
அத்துடன் அங்கு பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி சாதனங்களும் தூக்கி எறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் சாரதியையும், அதன் உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் மரண வீட்டில் அஞ்சலி உரையாற்றக் கூட மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் உரிமை வழங்கப்படாத நிலை காணப்படுவதாக இடது சாரி முன்னணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும், பொலிசார் இதன் போது நடந்து கொண்ட முறைகள் அதிருப்தி அளிப்பதாகவும் கட்சியின் ஊடக அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.