குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

மகிந்தவின் பயணம்; தமிழரசுக் கட்சி மாநாடு; வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு: நாளை யாழ்ப்பாணத்தில் மூன்று முக்கிய நிகழ்வுகள்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் விஜயம், தமிழரசுக் கட்சியின் வருடாந்தத் தேசிய மாநாடு, வே. பிரபாகரனின் தந்தை தி.வேலுப்பிள்ளையின் இறுதி நிகழ்வு என மூன்று முக்கிய நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழப்பாணத்தில் நடைபெறவுள்ளன. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தேர்தல் பரப்புரைகளுக்காக நாளை காலை யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு படையினர் மத்தியில் அதிபர் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்காக பலாலி, வடமராட்சி போன்ற பகுதிகளுக்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, அதன் பின்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு முதல் முறையாக பயணம் செய்யவுள்ளார்.

நாளை காலை 11:00 மணியளில் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்கவுள்ளதாகவும், மேலும் பல நிகழ்வுகளில் அவர் பங்கேபற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ச தனது யாழ்ப்பாணப் பயணத்தின் போது வலிகாமம்-வடக்கு உயர் பாதுகாப்பு வலய மீள்குடியமர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்தத் தேசிய மாநாடும் நாளை காலை 10:00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மிகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் தமிழரசுக் கட்சி இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி அதிபர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் போதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முனைப்புக் காட்டி வந்தது.

இந்த முடிவு தொடர்பாக இருகின்ற பல்வேறு கேள்விகளுக்கும் இந்த மாநாட்டில் பதிலளிக்க தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் சமகால அரசியல் நிலை பற்றிய கொள்கை விளக்க உரை ஒன்றை நிகழ்த்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு முன்னர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

ஆனால் - வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகே நடைபெறவுள்ள மகிந்த ராஜபக்சவின் பொதுக் கூட்டத்தினால் இடையூறுகள் ஏற்படலாம் எனக் கருதி இந்த மாநாடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது - நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அதேவேளை, பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் தந்தை தி. வேலுப்பிள்ளையின் இறுதி நிகழ்வுகளும் நாளையே நடைபெறவுள்ளன.

நாளை காலை 10:00 மணியளவில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்று 11:00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் அவரது உடல் தகனம் செயயப்படும்.

இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது உடல் தற்போது யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாளை யாழ்ப்பாணத்தில் சமநேரத்தில் நடைபெறவுள்ள இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளும் பொது மக்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி.பு.பலகை

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.