குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 15 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பிரபாகரனின் தந்தையாரின் இறுதிக்கிரியை நாளை வல்வை ஊறணி மயானத்தில்

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை.. அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் அன்று முற்பகல் 11 மணியளவில் ஊறணி மயானத்தில் தக னஞ்செய்யப்படும். அமரர் வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வை, பூச்சிவிட்டா னில் உள்ள அவரது உறவினர்களில் ஒரு வரின் வீட்டில் வைக்கப்பட்டு கிரியைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பூச்சிவிட்டான் பகுதி தீருவில் பன்னிருவர் மயானத்திற்குச் சமீபாக உள்ளது.

அமரரின் பூதவுடல் இன்று சனிக்கிழமை நண்பகல் தொடக்கம் தீருவில் சதுக்கத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பனாகொட இராணுவ தடுப்பு முகாமில் காலமான வேலுப்பிள்ளையின் சடலத்தை  நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.கே. சிவாஜி லிங்கம் பொறுப்பேற்று இங்கு கொண்டுவர ஏற்பாடாகியுள்ளதாகவும் அறியவந்தது. அதே பனாங்கொட முகாமில் தடுத்து வைக் கப்பட்டிருந்த பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை யும் யாழ்ப்பாணத்துக்கு கூட்டி வரப்படுவார் என்றும் பிந்திய தகவல்கள் தெரிவித்தன.
நன்றி.உதயன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.