குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆனி(இரட்டை) 6 ம் திகதி சனிக் கிழமை .

மட்டு. முதல்வர் சிவகீதா சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக ஐ.தே.க தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மகாநாட்டில் அறிவித்துள்ளார்.

இம்மாகாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபக செயலாளரான இவர் இறுதியாக நடைபெற்ற மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாநகர முதல்வராகத் தெரிவானார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகத் தலைவரான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் லண்டனிலிருந்து நாடு திரும்பி ,கட்சியின் உட்பூசல் காரணமாக விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் உப தலைவராகத் தெரிவானார்.

அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையுமாறு இவருக்கு விடுத்த அழைப்பின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை விட்டு விலகி 3 மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சி நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டு வந்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொகுதி ரீதியாக மட்டக்களப்பு தொகுதி - அமைச்சர் அமீர் அலி, பட்டிருப்புத் தொகுதி - அமைச்சர் விநாகமூர்த்தி முரளீதரன் ,கல்குடா தொகுதி - கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்தமை தொடர்பாக இவர் அதிருப்தியடைந்திருந்ததாகவும் இதன் காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்திருந்ததாகவும் பரவலாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

by வீரகேசரி இணையம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.