குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

"கோவிலாக" மாறியுள்ள "அலரி மாளிகை" வசீகர வித்துவான் மகிந்த

பிரதமர் மாளிகையாக இருந்த அலரி மாளிகையை வலுக்கட்டாயமாக தான் கைப்பற்றி ஜனாதிபதி மாளிகையாக்கிய மஹிந்த, இப்போது அதை ஒரு 'கோவிலாக' மாற்றியுள்ளார் என்றுதான் செல்லவேண்டும். எல்லாம் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மஹிந்தவுக்கு இந்திய சாத்திரிமார் சொல்லிக்கொடுத்துள்ள தந்திரங்கள் தான் இவையாம். இதன்படி தனது மாளிகையை அன்னசத்திரமாக மாற்றி, இலவச உணவு, பானம் வழங்கிவருகிறார் மஹிந்த. இங்கு பூஜைகளுக்கு குறைவில்லை.

 ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலில் ஒரு "மந்திரித்த கயிறு" கட்டப்பட்டுள்ளதாகவும், ஓசி சாப்பாட்டுக்கு அழைக்கப்படுபவர்கள் அனைவரும் முதலில் அந்த கயிற்றின் மேலாக பாய்ந்து செல்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கொடுக்கப்படும் உணவிலும் புனிதமான மஞ்சள் அதிகம் சேர்க்கப்படுகின்றமை இன்னொரு விடயம். தேர்தல் வெற்றிக்காக "வசியம்" செய்வதற்காக இந்தியாவிலிருந்து மஹிந்தவால் அழைக்கப்பட்டுள்ள "சாமிமார்கள்" இரவு பகலென்று பார்க்காமல் கடுமையாக உழைத்து வருகின்றனராம்.

வசியம் செய்வதற்காக பலவகையான பதார்த்தங்கள் உணவுக்குச் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இதற்கும் ஒருபடி மேலேபோய், இதற்காக உணவு தயாரிக்கப்படும் இடத்துக்கு சிறப்பு தூதுக்குழு அனுப்பப்பட்டு தாம் கூறும் பதார்த்தங்கள் யாவும் உணவில் சேர்க்கப்படுகின்றதா என்ற சோதனைவேறு நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது கிடைக்கப்பெறும் தகவலின்படி ஜனாதிபதி யாரையாவது ஓசியாக சாப்பாட்டிற்கு அழைத்தால் அவர்கள் தற்போது அங்குசெல்லப் பயப்படுவதாக கூறப்படுகிறது.
நன்றி .வன்னிஇணையம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.