குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஆட்சி மாற்றத்துக்கு மக்களைக் கோர கூட்டமைப்பு நேற்று ஏகமனதாக முடிவு

அதற்காக பொன்சேகாவை ஆதரிக்கவும் தீர்மானம்

தமது ஆட்சியை நீடிப்பதற்கு மீண்டும் ஆணை தருமாறு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் மக்களைக் கோருவது என்று நேற்று ஏகமனதாக முடிவு செய்தது. தமிழ்க் கூட்டமைப்பு இன்று காலை பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தி அங்கு ஓர் அறிக்கையை வெளியிட்டுத் தனது முடிவை அறிவிக்கும் எனவும் தெரியவந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்றுப் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள குழுக்களின் அறையில் தொடர்ந்து கூடியது. பின்னர் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  அவசரகால நீடிப்புப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக உறுப்பினர்கள் தமது கூட்டத்தை இடைநிறுத்தினர். மீண்டும் மாலை 5.30 மணிக்கு கொழும்பு மாதிவெலயில் உள்ள எம்.பிக்களின் இல்லத் தொகுதியில் சந்திரநேரு எம்.பியின் வீட்டில் கூட்டம் தொடர்ந்தது.

நேற்றிரவு 9.45 மணிவரை வெகு காரசாரமாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் 18 எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
லண்டனில் இருக்கும் ஜெயானந்தமூர்த்தி, சந்திரநேரு, இந்தியாவில் தங்கி நிற்கும் கனகசபை, தடுப்புக்காவலில்  உள்ள கனகரட்ணம் ஆகியோர் கூட்டத்தில் பங்குபற்ற இயலவில்லை.

கருத்துச் கலாசாரம்
கூட்டத்தின் முடிவு குறித்து தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்டோம். "காரசாரமாகப் பலதரப்புக் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. தமது தற்போதைய ஆட்சியை நீடிப்பதற்காக மக்களிடம் ஆணை கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்துள்ளார். அதற்கு இடமளிக்கக் கூடாது. அந்த ஆணையை அவருக்கு வழங்கக் கூடாது. அதை நிராகரிக்கும்படி எமது மக்களைக் கோர வேண்டும் என்ற முடிவு முதலில் ஏகமனதாக எட்டப்பட்டது."

"அதையடுத்து இரண்டாவது கருத்து ஒன்று கூட்டத்தில் கலந்துகொண்ட பலராலும் முன்வைக்கப்பட்டது. அது  இத்தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களையுமே ஆதரிக்கக் கூடாது என்பதாக இருந்தது. பலரின் கருத்து அதுவாக இருந்த போதிலும் இதனை ஒட்டி நான் அனைவருக்கும் விளக்கம் அளித்தேன். இறுதியாக, எமது முதலாவது தீர்மான விடயத்தை  அதாவது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நீடிப்புக்கான ஆணைக் கோரிக்கையை நிராகரித்துத் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவை  எட்டுவதற்காக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து இன்று புதன்கிழமை காலை பத்திரிகையாளர் மாநாடு கூட்டி முடிவை அறிவிப்போம்''  என்றார் சம்பந்தர்.

எதிரும் புதிருமான பல கருத்துக்கள்
"இவ்விடயம் குறித்து ஆராயப்பட்ட போது எதிரும் புதிருமாகப் பல கருத்துகள் முன்வந்தன. ஆனால் இறுதி முடிவு ஏகமனதானது''  என்றார் கூட்டமைப்பின் மற்றொரு சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர். இந்த முடிவை எட்டுவதற்கு முட்டுக்கட்டை போடும் விதமான கருத்துக்கள் ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றோரிடம் இருந்து வந்து கொண்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவிக்கும் முடிவுக்குத் தாங்கள் அனைவரும் கட்டுப்படுகின்றனர் என்று தொடர்ந்து தெரிவித்து வந்தமையால், இறுதியில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை சம்பந்தர் அறிவித்த போது, அதற்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டியதாயிற்று எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

இணக்க ஆவணம் வாசிக்கப்பட்டது
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தாம் கண்டுள்ள இணக்கம் குறித்து இக்கூட்டத்தில் சம்பந்தர் விளக்கினார். அது தொடர்பான ஆவணத்தை அவர் கூட்டத்தில் வாசித்ததோடு அதன் மூலப்பிரதியையும் அங்கு காட்டினார். எனினும் அதன் பிரதி அங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை.
மூலப் பிரதியில் சரத் பொன்சேகாவும், ரணிலும் மட்டும் கையொப்பமிட்டிருக்கின்றனர். சம்பந்தர் அதில் ஒப்பமிடவில்லையே என்று ஸ்ரீகாந்தா அணி ஆட்சேபம் கிளம்பியதாகத் தெரிகின்றது. எனினும் இது ஒப்பந்தம் அல்ல, எங்களுக்கு அவர்கள் தந்த உறுதியுரை ஆவணம் மட்டுமே என்று சம்பந்தர் அதற்கு விளக்கமும் பதிலும் தந்தார் எனத் தெரிகிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வுயோசனை தொடர்பிலும் அதில் உள்ள சில விடயங்களை ஒட்டி அடிப்படைப் பிரச்சினைகளை இதே தரப்பினர் கிளப்பினர் எனத் தெரியவந்தது. தீர்வு ஒற்றையாட்சி முறைக்குள்ளா அல்லது அதற்கு வெளியிலா என்பது இந்த ஆவணத்தில் தெளிவாக வரையறை செய்யப்படவில்லை என்று குறை கூறி அவர்கள், இந்த அடிப்படையில் தாங்கள் ஏமாற்றப்படலாம் என்றும் எச்சரிக்கை செய்தனர். அது குறித்து சம்பந்தன் எம்.பி. மாவை சேனாதிராசா எம்.பி. போன்ற மூத்த தலைவர்கள் கொடுத்த விளக்கம் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிய வந்தது. சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் தீர்மானத்தை தமிழ்க் கூட்டமைப்பு ஏகமனதாக எடுத்துள்ளது என்று நேற்றிரவு கூறப்பட்டாலும், இன்று அது பற்றிய அறிவிப்பை வெளியிடும் பத்திரிகையாளர் மாநாட்டில், கூட்டமைப்பில் அங்கம் பெறும் சகல கட்சிகளினதும் தலைவர்களும் பங்குபற்றினால்தான் அது உறுதியாகும்  என்றார் கூட்டமைப்பின் மற்றொரு எம்.பி.
நன்றி - உதயன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.