சுவிசு(ஸ்) தேசிய வங்கி கடந்த 2012ம் ஆண்டு 6.9 பில்லியன் ஃபிராங்க் இலாபம் ஈட்டியுள்ளது.
இந்த இலாபம் சனவரி மாதம் செய்த மதிப்பீட்டை விட ஒரு பில்லியன் டொலர் அதிகமாகும் என்றும் அந்நியச் செலாவணி இருப்புக்கு உண்டான வரி விகிதம் அதிகரிப்பு மற்றும் தங்கத்தின் விலை உயர்வு போன்றவை இந்த இலாபத்துக்கான முக்கிய காரணம் எனவும் ஊடகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்த இலாபமான 6.9 பில்லியனில் அந்நியச் செலாவாணியால் கிடைத்த இலாபம் 4.5 பில்லியன் ஃபிராங்க் மற்றும் தங்கத்தினால் கிடைத்த இலாபம் 1.4 பில்லியன் ஃபிராங்க் ஆகும்.
பங்கிட்டுத் தரக்கூடிய இலாபத்தொகையான 2.4 பில்லியன் ஃபிராங்கில் 1.5 மில்லியன் மட்டும் பங்குதாரர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.
சனவரியில் இவ்வங்கி 6 பில்லியன் ஃபிராங்க் இலாபம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தது. ஆனால் எதிர்ப்பாரத்தை விட அதிகமாக 6.9 பில்லியன் ஃபிராங்க் இலாபம் கிடைத்திருக்கிறது.
மேலும் கடந்த 2011ம் ஆண்டில் இவ்வங்கியில் இலாபம் 13.05 பில்லியன் ஃபிராங்க் என்பது குறிப்பிடத்தக்கது.