குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

குமரிநாடு.நெற் இணையதளம்2010ஆம் ஆண்டு பிறந்திருக்கும் வேளையில் வாழ்த்தி நிற்கின்றது..

”மனத்துக்கண் மாசிலன் ஆதல்அனைத்துஅறன்
ஆகுல நீர பிற”

ஒருவன் தன்மனத்தில் குற்றமற்றவனாக இருக்கவேண்டும் அதுவே அறம்(நீதி) ஆகும்.மற்றவையெல்லாம் ஆரவாரத்தன்மை கொண்டவையாகும். இவ்வாண்டு உலகமக்கள் இயற்கை பற்றியும் உயிர்களிடத்தில் மதிப்பும் கொண்டு வாழவேண்டும். சென்றாண்டு நிகழ்ந்த இனஅழிப்பை உலகத்தமிழர் மறந்துவிடக்கூடாது.அம்மக்களின் நலன் மேம்பட எல்லோரும் உழைக்கவேண்டும்.

ஊடகத்துறையினரும் இதற்காக பாடுபடவேண்டும். புதியாண்டில் தூயதமிழ் பேணுவோம். வடஇந்திய ஆதிக்கத்தால் தமிழுக்குள்
பிறவடமொழி எழுத்துக்களும் சொற்களும் வந்து தமிழ் சிதைந்து வருகிறது.புதியதலைமுறைக்கு தமிழ் சொற்களை ஊட்டுவோம் இது பெரிய தமிழ்த்தொண்டாகும் தொலைக்காட்சி செய்திகளிலும் நிகழ்ச்சிகளிலும் இவை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

திரும்பத்திரும்ப கேட்கும் போதும் பார்க்கும் போதும் திருத்தம் வந்தேயாகும். யுத்தம் வருடம் வடசொல்.. போர் ஆண்டு தமிழ்ச்சொல்.. சுனாமி சப்பானியச்சொல்.. கடற்கோள் ஆழிப்பேரலை.. தமிழ்ச்சொல் எடுத்துக்காட்டாக இதைக் குறிப்பிட்டமை
மிகையாகாது என்ற கருத்தோடு தைப்பொங்கல் தமிழரின் ஆண்டுப்பிறப்பே புத்தாண்டு என்ற பொருளுடையது. தைப்பொங்கல்  அன்றே தை(சுறவம்) பிறக்கின்றது. தமிழில் அக்கறையில்லாது சுறவ(தை) மாதத்தை யனவரி என்றும் கார்த்திகையை நவம்பர் என்றும் எழுதிவருகின்றனர். தமிழீழத்தில் பெயர்ப்பலகையில் தூயதமிழ் இருந்ததை நினைவுபடுத்தி மீண்டும் வாழ்த்தி விடைபெறுகின்றோம்

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.