குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவும் இன்றைய நிலையும்.

இக்கட்சியின் முடிவு காலத்தின் தேவைகருதியதாக அமைந்துள்ளது. அதாவது தனித்தோ அல்லது மகிந்தாவிற்கோ களத்தில் நிற்பதில் எதுவிதபயனுமில்லை என்பது கட்சியின் முடிவாகும். இதன்முடிவில் தமிழ் மக்களின் பங்களிப்பு மிகஅவசியமாகும். இக்கட்சியிடம் அரசியல் நகர்வை எமது தலைவர் முற்கூட்டியே ஒப்படைத்தமை தீர்க்கதர்சன சிந்தனையில் இதுவும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே தான் கட்சியின் முடிவை தமிழ் மக்களாகிய நாம் ஆதரிக்கவேண்டிய காலமாகும். இல்லையேன் நாம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் எங்கள் இலட்சியத்தை அடையமுடியாமல் போய்விடும். கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களிற்கு அடுத்துவரும் தேர்தலில் நாம் அவர்களிற்கான தண்டனையை வழங்க முடியும் எனவே அதுபற்றி இப்போது நாம் கவலைப்படாமலும், விமர்சனம் செய்யாமலும் இருப்பதே காலத்தின் கட்டாயமாகும்.

 

இதேபோல் தமிழ்மக்களின் உரிமையை பாதுகாக்கும் ஒரேகட்சி கூட்டமைப்பு. ஏனைய தமிழ் கட்சிகள் தற்போது கூட தவறுகளை உணராது துணைபோகும் கட்சிகளாகவும், மனிதநேயமற்று தமிழ்பண்பாட்டை சீரழித்து விலைபேசும் கட்சிகளை நம்பி எங்களிற்கு இருக்கும் ஒரேயொரு உரிமையை(வாக்கு) வீனாக்கிவிடாதீர்கள்.  மற்றும் வாக்களித்தால் ஆபத்து என பயம்கொள்ளாதீர்கள். காரணம் நீங்கள் போட்டவாக்கு யாருக்கு போடப்பட்டது என அறியவே முடியாது.

தமிழ்தேசியகூட்டமைப்பின் முடிவை மீறி சாதாரணமாக சுயேற்சை என்று முடிவெடுத்தவர்கள்.. மக்கள் மனதில் சாதாரணமாணவர்களாகவே ஆகிவிட்டார்.இவருக்கு முன்பே தமிழ்தேசியக்கூட்டமைப்பை மீறி அரசுக்கு வாழாட்டியவர்களுக்கும் இந்த தேர்தலில் மக்கள் ரற்ரா காட்டிவிடுவார்கள்..இதைவிடுத்து இவர்களைப்பற்றியெல்லாம் மக்கள் அதிகமாக அலட்டிக்கொள்ளப்போவதில்லை..

தயவு செய்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

நன்றி - ஆக்கம் வன்னி விஐயன்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.