குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உடலில் இரைப்பையில்லை வாயில் பவுண்பல்லு. பூநகரிபொ.முருகவேள் ஆசிரியர் குமரிநாடு.நெற்-சுவிசு

பிரதேசங்களில்  வாழவீடுகளில்லை  கமஞ்செய்வோருக்கு கம்மாலைகளில்லை.

பிரதேச சபைக்கட்டிடமோ பிரகாசமாயிருக்கு உறுப்பினர்களின்
உடைகளில்கூட ஒற்றுமையில்லை உள்ளங்களில் ஒற்றுயிருக்குமா? அதுதான்வேண்டுமே!
அதிகாரிகளின்  புரிந்துணர்வு அவசியம் அவதிப்படும் மக்களின்சேவைக்கு.

கட்சிகள்கொள்கைகள் தலைவர்கள் வேறாகவிருந்தாலும் பூநகரிக்கோவில்
என்றகருவறை ஒன்றல்லவா? அதற்குள்இருக்கும் கடவுளரே நீங்கள்
மக்களின் தேவைகளையுணர்ந்து அன்புடன்அறிவுடன் பணிபுரியுங்கள்.
உங்களுக்கு வாகனங்கள் வழங்கியிருக்கு மக்களின்சேவைக்கு
மக்களில் காலில்லாதோர் தந்தையில்லாதோர் அவர்ஓய்வுதியமே கிடைக்காதோர்
உங்கள்உறவுக்குள்ளேயிருக்கு ஊருக்குள்ளேயிருக்கு அவர்களுக்கு செய்ததென்ன?

வீதிகள் அமைத்திருக்கு தெருக்களுக்கு மண்கள்போட்டிருக்கு தண்ணீர்த்தாங்கியிருக்கு 
நுளம்பிற்குவலைகொடுத்திருக்கு  ஏதோஒரு கூட்டில்தான் நீங்கள் வாழவேண்டுமென்றோ!
தத்தமதுஇடங்களில் பள்ளியிருக்கு படிப்பதற்கு பிள்ளைகள் வேற்றிடங்கள் செல்லவேண்டியிருக்கு
தரமானகல்வியை வழங்கதரணமென்னும் அங்குவரவில்லைசரியானசேவையினும் மலரவில்லை.
போக்குவரத்து வசதிகள் சரியாகசீர்ப்படவில்லை நாற்பதுகுடும்பம் வாழும் ஊருக்கு
பேருந்துசேவை நாநுாறுகுடும்ப ஊர்களுக்கு போக்குவரத்து சேவையில்லை.

மண்வெட்டிதெரியாத  கைக்கத்திதெரியாத ஏர்கலப்பைதெரியாதஊர்பிள்ளைகளாக
பூநகரி பிரதேசமிருப்பதை பிரதேசபை அனுமதிக்கலாமா? தலைவர்இராசாஎதிர்தலைவர்
வல்லிபுரஇராசா இவற்றையுணர்ந்து பிரதேசசபைஊடாகவே கம்மாலைஅமையுங்கள்.
மரக்காலை இரும்பாலை அமையுங்கள் தொழில்களைவழங்குங்கள்.
பால்தரும் ஆவினங்களைப்பெற்றுக்கொடுங்கள் பனைகளை நட்டு இயற்கைவளம்பேணுங்கள்.
சேவைகள்செய்யத்திட்டங்கள் தீட்டுங்கள் கட்டங்கட்டமாக வளர்த்தெடுங்கள்.

பூநகரியில் இயற்கைதந்த வளமான மண்ணை மாற்றர் வரிசெலுத்தாது
அள்ளிச்செல்ல கொள்ளையடிக்க நாம் கண்டுகொள்ளாதிருப்பது ஏன்?.
தனிநபர்களால் மந்திரிகளை அணுகமுடியம்போது ஓட்டுநர்களே சாதிக்கும்போது
உங்களால்முடியாதா? முடியும் முயற்சியுங்கள்.வழியொன்றுதேடுங்கள்.
பூநகரிக்கு வருமானம் வரவகைசெய்யுங்கள் வளமானஇடத்தில் நீங்களும்
வாழவருங்காலத்தில் நிலையுருவாகும் வாருங்கள் மக்கள்சேவைக்கு.