குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க வசதியாக கிளிநொச்சி மைதானத்தில் 68 கொத்தணி நிலையங்கள்

போரினால்  இடம்பெயர்ந்த மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, கிளிநொச்சி, றொட்றிக்கோ விளையாட்டு மைதானத்தில் 68 கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக நேற்றுக் கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. 

மேலதிக தேர்தல் ஆணையாளர் எஸ். சிறிவர்த்தன, இடம்பெயர்ந்தவர்களின் வாக்களிப்பு தொடர்பான பிரதி ஆணையாளர் எஸ்.சண்முகம், யாழ். அரச அதிபர் கே.கணேஷ், யாழ்.பிரதித் தேர்தல் ஆணையாளர் பி.குகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு முன்பாக இவர்கள் பூநகரி, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பது குறித்து அப்பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆராய்ந்தனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
* பூநகரி உதவி அரச அதிபர் பிரிவில் உள்ள 19 கிராம சேவையாளர் பிரிவுகளி லும் மக்கள் முழுமையாக மீளக்குடியமர்ந் துள்ளதால், அங்கேயே வாக்களிப்பு நிலையங்களை அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 12 பாடசாலைகளில் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படும்.
* கரைச்சி உதவி அரச அதிபர் பிரிவில் மக்கள் மீள்குடியமர்ந்த 8 பிரதேசங்களில் 8 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

* கரைச்சி உதவி அரச அதிபர் பிரி வில் மீளக்குடியமர்த்தப்படாத 34 கிராமங்கள் மற்றும் மீளக்குடியமராத கண்டாவளை, பளை ஆகிய உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட 34 கிராமங்களுக்குமாக மொத்தம் 68 கிராமங்களுக்காக கிளிநொச்சி, றொட்றிக்கோ விளையாட்டு மைதானத்தில் கொத்தணி அடிப்படையில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

* இந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிக்கச் செல்லும் வாக்களார்களுக்கு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இருந்து இலவச பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும்.

* கைதடி பனம்பொருள் ஆராய்ச்சி நிலையத்திலும் தெல்லிப்பழையிலும் இயங்கும் புனர்வாழ்வு நிலையங்களில் தங்கி உள்ளவர்கள் வாக்களிக்க இரு இடங்களிலும் தலா ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படும்.
உதயன் இணையத்திலிருந்து..

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.