குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

அமெரிக்க மற்றும் பிரிட்டனின் கருத்துக்களுக்கு இரான் கடும் எதிர்ப்பு

போராட்டக்காரர்களை அடுக்கும் போலீசார் இரானில் ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்ற வன்முறை கலந்த போராட்டங்களில் குறைந்தது எட்டுபேர் இறந்தது குறித்து, அமெரிக்காவும் ஐரோப்பாவும் வெளியிட்டிருந்த கருத்துக்களுக்கு, இரான் கடும் கோபத்துடன் எதிர்வினையாற்றியிருக்கிறது.

 வெளிநாடுகள் இரானுக்குள் ரகசிய செயல்திட்டங்களை செயற்படுத்த முனைவதாக இரானிய வெளியுறவு அமைச்சர் மனுச்சர் மொடாகி அவர்கள் கூறியுள்ளார்.

அவரது கருத்துப்படி பிரிட்டன் முட்டாள் தனமாக பேசுவதை நிறுத்தாவிட்டால், பிரிட்டனின் முகத்தில் அறைந் தாற்போல இரான் எதிர்வினையாற்றும் என்றும் அவர் கூறினார்.

ஒன்றுமறியா அப்பாவி இரானியர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதை தாம் கண்டிப்பதாக ஒபாமா நேற்று கூறியிருந்தார்.

இரானிய போராட்டக்காரர்கள் தைரியமானவர்கள் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கூறியிருந்தார்.

இரானில் இருக்கும் பிரிட்டிஷ் தூதர் இரானிய அரசால் நேரில் அழைக்கப்பட்டு இரானின் கண்டனம் அவர் மூலம் முறையாக பதிவு செய்யப்பட்டது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.