குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஈழம் உள்ளிட்ட தமிழர் வாழும் நாடுகளில் உள்ள நெருக்கடிகளும் தீர்வுகளும்

உலகில் எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பது இன்று எல்லோரும் அறிந்த விடயம்.ஆனால் அவர்களின் நெருக்கடிகள் என்ன என்பது எல்லோருக்கும் அறியப்படாத விடயம் அந்தந்த நாடுகளில் வாழ்வோர் தமது நெருக்கடிகளை வெளிக்கொணரும்போது அவற்றை வெளிப்படுத்த முடியும்.

 அவர்கள் கருதும் தீர்வைவிட மிக நல்ல தீர்வுகளை மற்றவர்களும் தந்துதவ வாய்ப்பு இருக்கலாம்.கட்டுரைக்காக அன்றி தமிழினத்தின் நன்மைக்காக எழுதவேண்டும்.இலங்கை மைந்தன் என்ற வகையில் எனது சகோதரி சகோதரியின் பிள்ளையின் குடும்பமும் சிறார்களும் வவுனியா பல உறவுகள் வருந்தி வாடுகிறார்கள்.. வாழுகின்றார்கள் என்றா எழுத முடியும்.போரில் பல உறவுகள் இறந்த்தாகச் செய்தி தாயும் தந்தையும் போரில் இறந்துபோக வவுனியா முகாமில் அவதியுறும் மாணவனுக்கு உயர்தர தேர்வு முடிவு வந்திருக்கிறது.அவருக்கு பல்கழைக்கழக அனுமதி கிடைத்திருக்கிறது. அவருக்கு உதவுவது யார்?

யாழ்பல்கழைக்கழகத்தில் முகாமைத்துவம் படித்துக்கொண்டிருந்த மூன்றாமாண்டு மாணவனுக்கு குண்டுதாக்கி இருகால்களும் இயங்கமுடியாத நிலை அவருக்கு எவர் உதவி? மனிதர் இன இராணவவெறியில் தமிழ்பெண்களைச் சிதைத்தனர்.இருபத்தோரம நாற்றாண்டில் ஆடைகளைக் களைந்து தமிழர்களை நடக்க வைத்து இரசித்து நகைத்தனர்.செய்மதிகளை வைத்திருந்த நாகரீக அறிவாளிகள் என்ன செய்தனர் இவற்றை எல்லாம் நினைவுபடுத்திக்கொண்டு கட்டுரையின் கருவுக்குள் நுழைகின்றோம்..

இலங்கையில் சிவபத்தன், இராவணன், எல்லாளன் பண்டாரக வன்னியன் (தமிழ் வரலாற்றில் தமிழினத்தின் இறுதி அரசன்) சங்கிலியன் கண்டியை ஆண்ட தமிழன் இரண்டாம் இராசசிங்கன் (ஐயாகண்ணு) போன்றோர் ஆட்சிசெய்த தமிழ் வரலாறு உள்ள இலங்கையைக் கைப்பற்ற வெள்ளையர்கள் தமிழர்களுடனேயே போர் செய்தனர்.. வென்றனர்.. இலங்கையை ஆண்டனர் இலங்கைக்கு விடுதலை கொடுத்து விட்டுச் செல்லும் போது நாட்டின் முழு நிர்வாகத்தையும் சிங்களவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

இதனால் இலங்கையில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பூர்வீக மக்கள் காலத்தில் பல தமிழர்கள் திறம்படக்கற்று சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் வெள்ளையர் நிர்வாகத்தில் இணைந்தனர். இவர்கள்  இந்நாடுகளில் இப்போது தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர் சிலரை இலங்கையிலும் மலேசியன் பென்சினியர், சிங்கப்பூர் பென்சினியர் என்று அழைக்கப்படுவது பேச்சு வழக்கில் உண்டு. இவ்வாறான தமிழரின் உயர் வாழ்வைக்கண்டு வெருண்ட சிங்களவர் தமிழர்களை இலங்கையில் எப்படி வைத்திருக்க வேண்டும் என்ற கற்பிதம் கொண்டவர்களாயினர்.


கல்வீடுகளிலும் மாளிகைகளிலும் வாழ்ந்தாலும் சுயதொழில் செய்து வருவாய் பெற்றதாலும் தமதுநிலங்களில் பயிர் செய்தும் பசுவளர்த்தும் பால்குடித்தவர்கள் கடலில் சுதந்திரமாய் மீன் பிடித்துண்டவர்கள் இன்று தமது உணவுக்கும் தண்ணீருக்கும் வரிசையாய் காத்துக்கிடந்து நொந்து மனநோயாளராக மாறி இருக்கின்றனர். அம்மணமாய் இருந்தாலும் அரசியலுக்காய் நிவாரணம் கொடுத்தால் வாங்க மறுக்கின்றனர். முதியோர் இறக்கின்றனர்.. இளையோர் கைதாகித் தண்டனைகளை அனுபவிக்கின்றனர்.. தப்பியிருக்கும் குடும்பத்தலைவர்களும் சேரமுடியாது புதிய தலைமுறை உருவாக முடியாது ஈழத்தமிழினம் இனவிருத்தியற்ற மலட்டினமாய் இருக்கிறது.மலயக மக்கள் இலங்கைக்குகைக்குள் தவிக்கின்றனர் ஈழத்தமிழர் உலகமெலாம் பரந்து அடிமை வாழ்வு வாழ்கின்றனர். இலங்கையில் பட்டதாரி ஆனாலும் என்ன? என்னதிறன் பெற்றிருந்தாலும் என்ன? வெள்ளையர் கொடுக்கும் வேலை செய்யும் உலக ஏவல் தொழிலாளறராக அலைகின்றனர்.

இதைவிட கடின உழைப்பாளிகளான ஈழத்தமிழரின் பணத்தை வீடு விற்பனை வர்த்தக நிறுவனங்கள் இலாபகரமாக நடத்தி வெற்றி பெற்றுள்ளது யுதர்கள் போல் பொருளாதாரம் மிக்கவர்களாகக் கருதப்படாது வறிய இனமாகவே மாறுவார்கள்.எதிர்காலத் தலைமுறையினர் அரசியல் ஊஞ்சலாட்டத்தில் திளைக்கிறார்களே தவிர மொழி,இன உணர்வோடு வளரவில்லை. தமிழைப்பேசுகிறார்கள்,  தமிழை 5,6 ஆண்டுகள் படித்துவிட்டு போட்டுவிட்டு போகிறார்கள்.எத்தனை இளையோர்கள் கணினியில் தமிழை பிரயோகிக்கின்றார்கள் இல்லையே..?  பெற்றோருக்காகவே ஒழிய தானாக இல்லை ஆகவே ஈழமும் புலமும் அவலத்தில் இருக்கிறது.உலகமயப்பொருளாதார நிலை போல் வெளிநாடுகளில் தமிழ்ப்பண்பாடு 30 ஆண்டுகளில் அடிபட்டுவிடும் எந்த இனத்தார் இவர் என்றநிலை வர வாய்ப்புண்டு. எனவே இலங்கையில் மலையகம் முதல் வவுனியா மட்டக்களப்பு உள்ளிட்ட யாழ்ப்பாணம் வரை தமிழர்கள் சுயமாக வாழ ஏற்பாடுகள் வேண்டும்.

போரில் இழந்த வீடுகள், இயந்திரங்கள்,  வீதிகள்,  பொதுக்கட்டிடங்கள், பயிர்கள் மற்றும் பல மரங்களை இழந்து ஊர்  இராணுவக்காடாய் இருக்கிறது.கொடுக்கும் உணவை எடுக்கும் மக்களாய் அவர்கள் அங்கு போகாதுபழைய நிலை பெற உலக அரசுகள் கோர வேண்டும். இந்தியா சீனாவை எல்லோரும் கேட்க வைக்க வேண்டும் தவறுக்கு ஏன் துணை போனீர்கள் நீங்களும் தவநானவர்களா? தமிழிற்கு உரிமை கொடுத்து வாழவிடுங்கள் என்று எடுத்துச்சொல்ல வைக்கவேண்டும். முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் முன்பு போல் தமிழர்கள் சுய கௌரவமாக வாழவிட வேண்டும். இவர்களுக்கு நட்டஈடுகள் கொடுக்கப்படவேண்டும். மனநோயால் பாதிக்கப்பட்டோர், புலனிழந்தோர், உறுப்பிழந்தோர்..பெற்றோரை இழந்தோர், கணவனை இழந்த பெண்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை சரியாகப்பராமரிக்க வகை செய்ய வேண்டும். தமிழர்களை ஏனைய இனத்தவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ மிரட்டுவது துன்புறுத்துவது குற்றம் என்று சட்டம் இயற்ற வேண்டும். இதனை உலகத்தமிழர்கள் எல்லா நாடுகளிலும் கேட்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள்போல் சம உரிமையுடன் மொழி பண்பாடு பொருளாதார அரசியல் சமூகமேம்பாட்டுடன் வாழ ஏற்பாடு செய்யும்படி இலங்கை அரசைக்கோரும்படி தமிழர்கள் வாழும்நாடுகளில் தமிழர் அமைப்புக்கள் கோரவேண்டும். இதை தமிழகம் உள்ளிட்ட உலகநாடெங்குமுள்ள தமிழர் அரசியலை விடுத்து ஒன்றுபட்டு சகல இன மக்களிடமும் கோரவேண்டும். இன்று மேற்குலகம் தமிழரின் நிலையை உணர்ந்துள்ள வேளையில் ஆசிய அராபியநாடுகளை எமக்காக குரல்கொடுக்க வைக்கவேண்டும். இவ்வாறே ஆபிரிக்க நாடுகளும் தமிழருக்காக குரல் கொடுத்தால் பிராந்திய வல்லரசுகள் சிந்திக்கும்.தமிழர் தமிழருக்குள் மாநாடு நடத்துவதோடு நில்லாமல் வேற்று இன மத நாட்டு மக்களுடனும் கூடிச்செயல்படும் காலம் வந்துவிட்டது. தனிப்பட்ட கட்சி அரசியலில் சிக்கித்தவிப்போர் இதையெல்லாம் சிந்தித்துச் செயலாற்றமாட்டார்கள்.

இந்தியா, மலேசியா, இலங்கை, பர்மா, அந்தமான், பசுபிக் தீவுகள், மொரீசியசு, ஆபிரிக்காவில் வாழ்வோர் மலேசியாவில் வாழ்வோர், மான்புமிகு அமைச்சர் திரு.சாமிவேலு போன்றோர் அடுத்தபடி அதிகார மீட்பு விடுதலையில் ஈடுபாடு கொண்டு உலகெங்குமுள்ள அரசியல் தலைவர்களை அரசியல் பாராது திரட்டி உலக அமைப்பக்களுக்கும், தலைவர்களுக்கும் வேண்டுதல் விட இது தக்கநேரம்.. ஈழத்தமிழர் பிரச்சினையைப்பயன்படுத்தி உலகளவில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகள் நெருக்கடிகளை முன்கொணர வேண்டும். தீர்க்கும்படி உலக நிர்வாக முறைப்படியும் அந்தந்த நாட்டிற்கு அமைவாகவும் நடக்கவேண்டும். இலங்கையிலும் சிங்கப்புரிலும் தமிழ் அரச மொழியாக இருப்பது போல் சாத்தியமான நாடுகளில் அரச மொழியாக்க கோரவேண்டும். இலங்கையில் ஆரம்பக்கல்விமுதல் பல்கலைக்கழகம்  வரை தமிழில் கற்கலாம் நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வழக்காடலாம். சட்டத்தில் இடமுண்டு இன்று பயங்கரவாத பூச்சாண்டியால் சில மறுக்கப்படுகின்றன ஆனால் சட்டமுண்டு எனவே நடைமுறை  மேம்பாடுகள் காண ஏற்பாடுகள் தீர்வுகள் வேண்டும். மீண்டும் இலங்கையில் வவுனியா முகாம் மக்கள் மீளக்கடியமர்த்தப்படல் பழைய நிலையைத் தோற்றல் மலையக மக்களின் மேம்பாட்டிற்கும் சம காலத்தில் தீர்வு காண அவர்களின் பிரதி நிதிகளை அழைத்து உலகத்தமிழருடன் இணைந்து போராட வேண்டுங்கள் வளமான மலையகத்தில்வாழும் மக்களின் வாழ்வும் வளமாக வேண்டும் என்ற ஏக்கமுடன் நிறைக்கின்றேன்......... 

தொடரும்... மொரீசியசு..பர்மா .. தென்னாபிரிக்க தமிழர்களின் நெருக்கடிகள் ..பொ.முருகவேள்..

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.