குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கிளிநொச்சி மாவட்டத்தின் அரச பணிமனைகள், அரச பணியாளர்களினதும் மீள் குடியேற்றப்பட்ட கிராமங்களின் விபரங்கள்.

கிளிநொச்சி கரைச்சிப் பகுதியில் 8 கிராமங்களில் மீள் குடியேற்றம் நிகழ்கின்றது.
1) யேந்தி நகர் 257 குடும்பங்கள்
2) உதய நகர் மேற்கு 235 குடும்பங்கள்
3) உதய நகர் கிழக்கு 76 குடும்பங்கள்
4) உருத்திரபுரம் கிழக்கு 194 குடும்பங்கள்
5) பெரிய பரந்தன் 94 குடும்பங்கள்
6) திரு நகர் தெற்கு 46 குடும்பங்கள்
7) கனக புரம் 45 குடும்பங்கள்
8) திரு நகர் வடக்கு 32 குடும்பங்கள்

இக்குடும்பங்களிற்கான நிவாரணப்பொருட்களை வழங்கும் பொறுப்பினை ப.நோ.கூ.சங்கங்கள் ஏற்றுச் செயற்படுத்தி வருகின்றன. தகரங்களும்.. தரப்பார்கள், மண்வெட்டி போன்ற உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களும் வழங்கப்படுகிறது. 25000 ரூபா பணமும் வழங்கப்படுகின்றது. இன்னமும் 350 குடும்பங்கள் கிளி.மத்திய கல்லூரியில் மீள் குடியேற்றத்திற்காக தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

 கிளிநொச்சிமாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஆர்.கேதீசுவரன் போருக்குமுன் இயங்கிய அதே பணிமனையில் அவரின் சேவையைத்தொடர்கின்றார். கிளிநொச்சி அரசாங்க செயலகம்(கச்சேரி)
கிளிநொச்சி கரைச்சி உதவி அரசாங்க அதிபர்
திருமதி.எசு(ஸ்) சுலோசினி போருக்கு முன் இருந்த அதே கட்டடத்தில் சேவையைத்தொடர்கின்றார்.
கிளிநொச்சி பூநகரி உதவி அரசாங்க அதிபர். திரு. சத்தியசீலன் அவர்கள் பூநகரியிலேயே தமது சேவையைத் தொடர்கின்றார்.
கிளிநொச்சி கண்டாவளை உதவி அரசாங்க அதிபர் பணிமனை இன்னமும் இயங்கவில்லை.
கிளிநொச்சி பளை உதவி அரசாங்க அதிபர் பணிமனை?. மதிப்பிற்குரிய இவ் அரச அதிபரும், உதவி அரசாங்க அதிபர்களும் கிராமசேவகர்களும் ப.நோ.கூ.ச.ஊழியர்களும் மற்றும் கல்வி, அஞ்சல், மருத்துவத்துறை ஊழியர்களும் கடினமாக உழைத்து வருகின்றார்கள். இனித்தான் அரசியல்வாதிகள் வருவார்கள் வந்ததும் வாலாட்டலும், வால்பிடித்தலும் ஆரம்பமாகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.