குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 32 பேர் விடுதலை

புனர்வாழ்வு நிலையத்தில் சில முன்னாள் சிறார் போராளிகள் இலங்கையின் வடக்கே சிறுவர் போராளிகளாக இருந்தவர்களில் 32 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தத் தகவலை, சிறுவர் புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்கா தெரிவித்திருக்கின்றார். வவுனியா பூந்தோட்டம் பகுதியில் செயற்பட்டு வருகின்ற சிறுவர் போராளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் இவர்களுக்குப் புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புனர்வாழ்வு நிலையத்தை ஒரு தடுப்பு முகாமாகத் தாங்கள் கருதவில்லை என்றும், அது ஒரு பாடசாலையாகவே இயங்கி வருகின்றது என்றும் விடுதலை பெற்றுள்ள சிறுவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கல்வி கற்பதற்கும், தொழில் பயிற்சி பெறுவதற்கும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இங்கு வாய்ப்புக்கள் அளிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.

இந்தச் சிறுவர்களின் விடுதலை குறித்து கருத்து வெளியிட்ட அவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க அவர்கள், எஞ்சியுள்ள சிறுவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.