குமரிக்கண்டம்
இதுவரை நடந்திருக்கிற உலகத் தமிழ் மாநாடு எதிலுமே தமிழ்மான உரிமைப் பண்பாடு என்பதை எந்த ஈர வெங்காயமும் திட்டவட்டமாக தெளிவுபடுத்தவில்லை. அப்படி எந்த அக்கறையும் இல்லை. மதுரை மாநாட்டில் பாவலரேறு அய்யாவுக்குப் பதிலாக அனுமதிக்கப்பட்ட திரு.காளிமுத்து அவர்களின் உரை மட்டுமே சிறிது ஆறுதலாக இருந்தது.
ஒப்பியன் மொழிநூலை செய்த மொழிநூல் மூதறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்களை ஆதரிக்காமல் இருட்டடிப்பு செய்தார் கருணாநிதி. எம்ஜிஆர் தான் பாவாணரை அன்புடன் ஆதரித்தார். குமரிக்கண்டத்தின் உண்மை பற்றி அமெரிக்க தொல்லியல் ஆய்வுக் கழகம் இந்துமாக்கடலில் ஆய்வுசெய்து ஒருவரைபடத்தையே உருவாக்கிவிட்டது. இதுகூடத் தெரியாமல் எத்தனையோ முண்டங்கள் குமரிக்கண்டம் ஒரு கற்பனைதான் என்று வரலாற்றுத் துரோகம் செய்கிறார்கள்.