குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

வீழ்ச்சிகாணாதோ மகிந்த ஆட்சி! மகிந்த சிந்தனையும் வீழ்ச்சியை நோக்கி? முதலமைச்சர்கள் சர்ச்சை!

23.09.2012  பொன்சேக்கா தலைமையிலான அரசியல் கட்சி அடுத்தசிலவாரங்களில் பதிவு ..வடமத்திய மாகாண முதலமைச்சர் சர்ச்சை ஆளும் கட்சியின் பெருபான்மை பலத்தில் மாற்றம் ஏற்படுத்தும்?

 

வீழ்ச்சிகாணாதோ மகிந்த ஆட்சி!பூநகரி.பொ.முருகவேள் ஆசிரியர் .சுவிற்சர்லாந்து. 23.09.கி.ஆ2012-தமிழாண்டு2043.

சர்ச்சைகள் நிரம்பிய சகதிகளில் மாகாணசபைகள். சூழ்ச்சிகள் சூழ்ந்து ஆட்ச்சிகள்.

மகிந்தவாழும் அலரிமாளிகையே நீறுபூத்த தணலாக அதற்குள் பிள்ளையானும்.

சரத்தும் தன்பங்கிற்கு கட்சிதொடங்க மகிந்த ஆட்சிக்கு சங்கடங்கள் தொடங்கும்.

முப்பிரிவாய் சிங்களம்பிரிபட மகிந்தவின் ஆட்சியின் உச்சம் ஆட்டம்காண.

உட்பகைகள் புலிகளைப் பலிகொண்டதுபோல மகிந்தமகிமையும் சாய்வது ஆரம்பமே!

ஆட்சியும்அதிகாரமும் ஆற்றங்கரை மரம்போன்றது அவ்வைசொன்ன அறிவுரை!

 

கிழக்கில் அரசிற்கும் இசுலாத்திற்கும் ஆபத்தாகலாம் அச்சம் அதனால் பிள்ளையான்

அலரிமாளிகை அலோசனை வரிசையில் விலங்கிடதசிறையில் அவர்மனதுபுகையில்

அலரிமாளிகைக்கு விறகுகள் அடுக்கி தீ மூட்ட ஆயத்தம் செய்கிறார் மகிந்தர்.

கிழக்குமாகாணசபையும் வடமத்திய மாகாணசபையும் சர்ச்சைக் குள்ளாவதும்

மகிந்தரின் தந்திரங்கள் தவிடுபொடியாவதும் மனைவி பிள்ளைகள் சகோதர்கள்நேர் எதிர்!.

அவர்களே பகைவரோ பலனற்ற உறவினரோ விரத்திக்கு வரவிருக்கும் மகிந்தர்!.

 

பொ.முருகவேள் ஆசிரியர் .சுவிற்சர்லாந்து. 23.09.கி.ஆ2012-தமிழாண்டு2043.

 

வடமத்திய மாகாண முதலமைச்சராக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டால், அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலாலின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

முதலமைச்சர் நியமனம் என்பது அதிக விருப்பு வாக்குகள் பெற்றாதனாலேயோ அல்லது வேறு தகுதிகளின் அடிப்படையிலோ வழங்கப்படுவதில்லை எனவும் அரசியல் அமைப்புச்

சட்டத்தின் படி மாகாணத்தில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அதிகளவான உறுப்பினர்களின் ஆதரவுள்ள ஒருவரே முதலமைசச்ராக நியமிக்கப்பட வேண்டும் எனவும்

அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். வடமத்திய மாகாணத்தில் ஆளும் கட்சியின் 21 உறுப்பினர்களில், 11 உறுப்பினர்கள் பேர்டி பிரேமலால் திசாநாயக்கவை ஆதரிப்பதாக சத்திய கடிதம் மூலம் அறிவித்துள்ளனர். 13வது அரசியல் அமைப்பு திருத்ததின் 154(ஈ)(4) ஷரத்தில், பெருபான்மையான உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற ஆளுநர் முதலமைச்சராக நியமிக்க முடியும்.

திசாநாயக்கவுடன் 6 உறுப்பினர்கள் இணைந்திருக்கும் சூழலில் எதிர்க்கட்சிகளின் 12 உறுப்பினர்களுடன் சேர்த்தால், ஆளும் கட்சியின் பெருபான்மை பலத்தில் மாற்றம் ஏற்படும் எனவும் தெரியவருகிறது.

மகிந்த ராயபசவின் ஆலோசனைப்படி எதிர்வரும் 24 ஆம் திகதி எசு.எம். ரஞ்சித் பதவியேற்கவுள்ளார்?

சனாதிபதி மகிந்த ராயபசவின் ஆலோசனைப்படி 24 ஆம் திகதி வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவியேற்க போவதாக தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற

எசு.எம். ரஞ்சித் தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாண மக்கள் அதிக விருப்பு வாக்குகளை வழங்கி, தன்னை முதலமைச்சர்

என்ற தகுதியை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர்; கூறியுள்ளார். பேதங்கள் இன்றி வடமத்திய மாகாண மக்களுக்காக பணியாற்றி போவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சரத் பொன்சேக்கா தலைமையிலான அரசியல் கட்சி அடுத்தசிலவாரங்களில் பதிவுசெய்யப்படவுள்ளது:-

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தலைமையிலான அரசியல் கட்சிக்கு அடுத்த சில வாராங்களில் பதிவு செய்யப்பட உள்ளது.  ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை

உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் இந்த புதிய கட்சியில் இணைய இணைக்கம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சரத் பொன்சேக்கா இந்த புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளதாகவும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள அமைச்சர்கள் உட்பட பலர் இந்த புதிய கட்சியில் இணைந்து கொள்ளள உள்ளதாகவும் தெரிக்கப்படுகிறது.