குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

எம் தொல்கலையான இந்த பரதநாட்டியம் நாட்டிய சாசுதிரத்தை வகுத்த பரதமுனிவர் வழிவந்தது என பலர் தவறாக உணர்ந்திருக்கிறார்கள்.கற்றும் வருகிறார்கள்.

 

தமிழ் அடையாளங்கள் மிளிரும் நாட்டியம் மீட்டெடுக்கப்பட வேண்டும்: பேராசிரியர் சபா.யெயராசா..எம் தொல்கலையான இந்த பரதநாட்டியம் நாட்டிய சாசுதிரத்தை வகுத்த பரதமுனிவர் வழிவந்தது என பலர் தவறாக உணர்ந்திருக்கிறார்கள்.கற்றும் வருகிறார்கள்.

 

பரதம் தமிழர்களின் தொன்மையான ஆடல் வடிவங்களில் இருந்து முகிழ்த்து மேலெழுந்த வடிவம். ஆயினும் இன்று இந்த எம்முடைய கலை வேறு சாயங்கள் பூசப்பட்டு இடைக்காலத்தில் கடத்தப்பட்டிருக்கிறது என பேராசிரியர் சபா. யெயராசா தெரிவித்துள்ளார்.திருமதி. முருகானந்தன் பத்மலோசனா ஆகியோரின் புதல்வியும் நாட்டிய கலைமணி சிறீமதி. திலகா மகேஸ்வரனின் மாணவியுமான செல்வி. கபிர்த்தனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் அண்மையில் நடைபெற்றுள்ளது.

 

இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக கல்வியல் சிந்தனையாளர் பேராசிரியர். சபா ஜெயராசா, அவரின் மாணவனும் பா.உறுப்பினருமாகிய சி.சிறீதரன் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக கல்வி அமைச்சின் முன்னாள் பணிப்பாளர் ஆலோசகர் முத்து சிவஞானம், இராமநாதன் இந்து மகிளிர் கல்லூரி அதிபர் திருமதி. கோதை நகுலராஜா, முகத்துவாரம் இந்துக்கல்லூரி அதிபர் செல்வி. பு. யோ. முருகேசு ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

அரங்கேற்றத்தில் பேராசிரியர்.சபா.ஜெயராசா உரை நிகழ்த்துகையில்,

 

ஆடற்கலை அற்புதமானது. தொன்மையும் அழகும் மிக்கது. இந்த கலையை கற்றுக்கொள்கின்றவர்களை வாழ்த்துதல் நம் கடமை.ஆயினும் இக்கலைபற்றிய நிலையும் நிலைமாற்றங்களும் நம் கலையாளர்களும் கல்வியியலாளர்களும் புரிந்துகொள்ளவேண்டிய காலமும் நம் கண்முன் நிற்கிறது.

 

ஆடல் உயர்ந்த கௌரவத்துடன் உணரப்பட்ட சோழர்காலத்தில் இக்கலையை திருச்சதிர் என்றும் ஆடியவர்கள் தேவரடியார்கள் என்றும் அழைக்கும் வரலாற்றை அறிவீர்கள். தொல்காப்பியத்தில் இக்கலை பற்றி கூறப்படும் மெய்ப்பாடுகள் யாவரும் அறிந்த தொன்மை.

 

சிலப்பதிகாரத்தில் பரதநாட்டியத்தின் எழிற்கை, தொழிற்கை எல்லாம் இன்று சமஸ்கிரத ஆடையுடுத்து அதுவே அதன் தொன்மை இலட்சணம் என தொடர்கிறது.

 

எம் தொல்கலையான இந்த பரதநாட்டியம் நாட்டிய சாஸ்திரத்தை வகுத்த பரதமுனிவர் வழிவந்தது என பலர் தவறாக உணர்ந்திருக்கிறார்கள்.கற்றும் வருகிறார்கள்.

 

இக்கலைக்கு என்ன நடந்தது இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கலைமீட்பு கிருஸ்ண ஜயரால் மேற்கொள்ளபட்டபோது தமிழ் அமையாளங்களுடன் இருந்த இந்த பரதநாட்டியம் வட நாட்டு சமஸ்கிருது அடையாளங்கள் திணிக்கப்பட்டு, இது பரத நாட்டியமென அடுத்து வந்த சந்ததிக்கு கடத்தப்பட்ட அடையாள அழிப்பு நிகழ்ந்தது.

 

திருச்சதிர் என்ற அழகான பெயரில் திரு மறைந்து சதிர் கொச்சைப்படுத்தப்பட்டது.

 

இத்தகு சிறப்பான எம் கலையை முன்னெடுக்கும் இந்த இளம் நாட்டிய அரங்கேற்றத்தில், எமது அடையாளங்களுடன் கூடிய பரதநாட்டியம் மீட்டெடுக்கின்ற பணியும் கடமையும் உண்டு என தெரிவித்தார்.