இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக் காலப்பகுதியில், இலங்கை இராணுவத்தினர் கைதிகளை சுட்டுக் கொல்லுவதாக குற்றஞ்சாட்டி அது தொடர்பில் வெளியான காணொளிப் படங்கள் சான்றானவையே என்று பிரிட்டிச் நாளிதழ் ஒன்று கூறுகிறது.
சனவரியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த காணொளி ஐரோப்பாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு மனித உரிமை அமைப்பு வெளியிட்டிருந்தது.
இந்த காணொளிப் படப்பதிவில் இலங்கை இராணுவ சீருடையில் இருப்பதைப் போன்று தோன்றும் ஒருவர் நிர்வாணமாகவும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் இருந்த இருவரை சுட்டுக் கொல்வதாக காண்பிக்கிறது.
பிபி சி உட்பட இந்த காணொளிப் படப் பதிவு பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது.
ஆனால் இந்த காணொளி புனையப்பட்ட ஒன்று என்று இலங்கைப் படைகள் கூறுகிறது.
எனினும் சுயாதீனமான தடயவியல் நிபுணர் ஒருவர் நடத்திய ஒரு ஆய்வில் அந்த வீடியோ படப்பதிவில் ஏமாற்றும் செயலோ அல்லது ஒட்டி வெட்டும் வேலையோ இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளதாக அந்த அந்த நாளிதழ் கூறுகிறது.