குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

வருகுது வருகுது உண்மை வெளியே வருகுது.

உள்வீட்டுக்காரர் எதிர்வீட்டுக்காரர் ஆகி இரண்டுபட்டதால் புதுமாத்தாளன் மூடுமந்திரத்தின் முடிச்சு அவிழ்ந்தது சரத்பொன்சேகா திருவாய்திறந்தார்.
கிராமப்புறத்து தோட்டங்களில் குரங்குகாவல் முறையை ஊரவர்கள் கையாள்வார்கள்.
தேங்காய்ச்சிரட்டையில் மிளகாய்ப்பொடி அருகருகே அய்ந்து ஆறு கொட்டன்கள் போட்டுவிடுவார்கள்.
குரங்குகள் இறங்கிவந்து மிளகாய்ப்பொடியை கையில்பிரட்டும் அகோரமாய் எரிவு உண்டாகும்... அதே கையால் தங்கள் கண்களில் மூஞ்சையில் பின்பகுதியில் நாக்கில் பிரட்டிவிட்டு கோபங்கொண்டு கொட்டன்களை எடுத்து தங்களுக்கு தாங்களே அடிபட்டுச் செத்துப்போகும் எந்தச்செலவும் இல்லாது தோட்டக்காவல் நிகழ்ந்துவிடும்.

இதுமுன்பு தமிழ்க்குழுக்களிடையே நிகழ்த்தப்பட்டது.தற்போது தமழ்கட்சிகளிடையே பயன்படுத்தப்படுகிறது.. இப்போ தேர்தலில் வேட்பாளர்களிடையேயும் இந்த குரங்குக்காவலையே நிகழ்த்துகிறார்கள்.
வெள்ளைத்தோட்டக்காரர்கள் வினையை சிங்களத் தரப்பபுக்குள் புகுத்தியுள்ளார்கள்.

செலவும் செய்மதியும் இல்லாது நடந்த உண்மைகளை.. ஆதாரங்களை. முள்ளுமில்லாது கத்தியுமில்லாது தோண்டிஎடுக்கிறார்கள் இறக்கப்போவது குரங்குகள்.. வெல்வது குரங்குகாவல் முறையை உருவாக்கிய வெள்ளைத்தோட்டக்காரர்கள்.

தமிழ்த்தரப்பு இக்காலத்தை வெற்றிதோல்விக்கப்பால் நன்கு பயன்படுத்தும் நிபுணத்துவத்தை கையாளவேண்டும்.இதுவரை துன்பப்பட்டவர்கள் தமிழர்கள் அவர்கள் உணர்வுடன் வாழ்ந்தார்கள்...இன்றைய..எதிர்கால நிலையை கருத்தில்கொண்டு அவர்களை யாருக்கு வாக்களிக்கும்படி வெளிப்படையாக கூறவேண்டியதுதானே.இதைவிடுத்து தமது இருக்கை பற்றியோசித்து எந்த வாலைப்பிடிப்பது என்று தடுமாறுகிறார்கள் என்பது தெரிகிறது.

யாழ்தாடிவேட்டி கட்சிக்காரர்கள் தமது சனநாயக விரோதப்போக்கை மறைக்கவும்...சில அபிவிருத்திகளை காட்டி வேலைவாய்ப்புக்களை வழங்கி ... வாசிகசாலைகளுக்கு மை தடவி  இடமாற்று சலுகைகளும் பதவி உயர்வுகளும் கொடுத்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார்கள்.

வவுனியா தாடிகோட் கட்சிக்காரர்கள் வவுனியா துன்ப நிகழ்வுகளில் இருந்து தப்பி சில சலுகைகளை காட்டி வெற்றிலைக்கு ஆதரவளித்து வெற்றி உலாவர எண்ணுகிறார்கள்.இவர்களை எல்லாம் சேர்த்து போர்க்குற்றத்திலிருந்து தப்ப பெரியவர்கள் முயல்கிறார்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.