குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

இலங்கை சனாதிபதித்தேர்தலும் இலங்கைத் தமிழர்களும்.

23.12.2009 இல் பிரசுரிக்கபட்டது.
இத்தேர்தல் இலங்கையில் அல்ல வெளியிலே நடக்கின்றது. பொம்மைகளாக சிங்கள வேட்பாளர்கள். தமிழர்களின் சனநாயக எதிர்ப்பு நாடுகளகான சீனா இந்தியா இரசுயா போன்ற ஆசியாநாடுகளின் வேட்பாளரே இன்றைய தலைவர் என்பது மேற்குலக நாட்டுக்கு நன்கு தெரிந்ததே! தமிழர்களின் ஆதரவுப்போக்குடைய மேற்குலக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் வதிவிட அனுமதியுள்ள வேட்பாளரே சரத்பொன்சேகா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்ததாண்டு மே மாத இறுதியில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் குழு சபையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான வாக்கெடுப்பில் அமெரிக்காவின் பின்னணியில் மேற்குலக நாடுகளும், வேறு சில நாடுகளும் எமக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால் இந்தியா, சீனா, இரசியா போன்ற வல்லரசு நாடுகளுடன்  இரசியாவின் முயற்சியால் ஏனைய ஆபிரிக்கா, லிபியா, அரபு நாடுகளும் எமக்கு எதிராக வாக்களித்ததன் மூலம்  "எரிந்த நெருப்பில் நெய்யை ஊற்றி" தமிழினத்தை மேலும் துன்பத்துக்குள்ளாக்கி போர்க்குற்றத்திலிருந்து தப்பியதோடு மட்டுமின்றி இலங்கைக்கே நிதி கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி நின்று நிதியைப் பெற்றுக்கொடுத்தது.  

இதனால் இத்தேர்தல் மீண்டும் இலங்கையில் களமிறக்கப் பட்டிருக்கிறது. இதில்வெல்பவர் தப்புவார், தோற்பவர் போர்க்குற்றவாளியாவார். இதனோடு முட்கம்பிவேலியின் துன்பநிலை மாறும், மாறாது என்பதே இத்தேர்தலின் முடிவிலேதான் தங்கியிருக்கின்றது.

சரத்பொன்சேகா அரசியலில் பலமற்ற மேற்குலக நாடுகளின் ஆதரவாளராக மாறியுள்ளார் போர்க்குற்றத்தில் இராசபட்ச தன்னையே மாட்டிவிடத்திட்டமிட்டே தன்னைப்பதவியில் இருந்து விரட்டி விட்டார் என்றுணர்ந்து இருப்பார். சிங்களவர்களின் இன்றைய 'கனவுநாயகன்' எனவே அவரைஇலகுவாக வெல்ல வைக்கமுடியும்.

எமது போராட்டத்தையும், தமிழ் அரசியல் கலாச்சாரத்தையும், எமது தேசத்தையும், எங்கள் உறவுகளையும், உறவுகளின் பாரிய சொத்துக்களையும் அழிக்க சர்வதேசத்தின் வாய்களையும், மனிதநேயத்தையும் புறம்தள்ளிவிட்டு ஆசியா வல்லரசுகளை பயன்படுத்தி எமது தேசத்தை மீட்டு அதனை வல்லரசுகளிற்கு பங்குபோட்டு கொடுப்பவரே தற்போதைய சனாதிபதி என்பது யாவரும் அறிந்ததே!
ஆகவே  இத்தேர்தலில் சிங்களம் என்றோ அல்லது எதிரியென்றோ பார்க்காது "எதிரியை எதிரிமூலம் வெல்வோம்" தற்போதைய சனாதிபதியை வெல்ல இவரின் இன்றைய பலமான எதிரியான சரத்பொன்சேகதவைப் பயன்படுத்தவேண்டும்.தமிழ் அரசியலைச் சீரழிக்கும் குட்டிச்சாத்தான்களை முடக்க மாறுபட்ட சிங்கள அரசியல் தலைமைத்துவம் வேண்டும். இதனால் தமிழ் தேசத்தின் தாராள சனநாயக அரசியல் கலாச்சாரத்தை வளர்க்க சாதகமான காலம்கனியும்.அத்துடன் 'தேசத்தின் அழிவுகளிற்கு விடிவும் கிட்டும்' பின்னர் அரசியல் அபிவிருத்தியடைந்த திறைமைமிக்கவர்கள் இணைந்து கொள்வார்கள். 

1. சனாதிபதித்தேர்தலில் தமிழ் வேட்பாளர் போட்டியிடுவது அல்லது போட்டியிடவைப்பது ஆசியவல்லரசுகளின் அடுத்தசதியாகும். தமிழின வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் நன்கு புரியும், பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் இருந்தே சாதிக்க முடியாததை இத்தேர்தலில் போட்டியிட்டு என்னத்தை சாதிக்க முடியும்? தற்போதைய சனாதிபதியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தலாம். இதுவே கடந்த காலத்தேர்தல்களில் நடந்தவை. வாக்களிக்காமல்விட்டு அதனை சூத்திரதாரிகள் பயன்படுத்துவார்கள் என்பதை எமது உறவுகள் நன்கு அறிவார்கள். அதுமட்டுமின்றி தனித்துப்போட்டியிடுபவர் மேற்குலக சிந்தனையையும், புலம்பெயர்தமிழர்களின் அபிலாசைகளையும், கருத்துக்களையும் கூர்மையாக ஆராய்ந்து மதிப்பளிக்கவேண்டும். இல்லையேல் அடுத்துவரும் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களிற்கு புலம்பெயர் தமிழர்கள் தமது அரசியல் சானாக்கியத்தை காட்டவேண்டி நேரிடும்.

2. தமிழர்கள் இத்தேர்தலில் மேடையையும், ஊடகங்களையும் பயன்படுத்தாது அரசறிவியல் சானாக்கியத்தைப் பயன்படுத்தி தேர்தலைச் சந்திக்கவேண்டும், இது காலத்தின் தேவையுமாகும். செலவில்லாத்தேர்தலும், சுலவமானவழி, தங்களை அல்லது கட்சியை அடையாளப்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரத்தைச் செய்யலாம். இவைகள் தமிழ் கட்சிகளிற்கு சாதகமான அரசியல் சூழ்நிலையாகும்.

3. வெளிநாடுகளில் உள்ள தமிழ் உறவுகள் தமது இலத்திரனியல் கருவிகள், மற்றும் தொடர்பாடல் மூலம்  ஈழத்திலுள்ள வாக்களிக்கத் தகுதியுடைய தமது உறவுகளிற்கு மேற்குறிப்பிட்ட அரசியல் கருத்துக்களை விளக்கி, உரிமையுடனும், உறவுமுறையுடனும் வேண்டுதல்கள் விடவேண்டும். இதைச்செய்யக் கூடிய இனமாக நாம் உலகில் வாழ்ந்து வருகின்றோம். இதனையும் செய்யாது விடுவோமாயின் நாம் தார்மீக அரசியல் கடமையிலிருந்து விடுபட்டவர்களாக மேற்குலகம் எம்மைக்கருதும். அத்துடன் இங்கு இழுத்துப்போட்டு மிதிக்கப்படுவோம். எனவே தான் எமக்கென அரசியல் உரிமை வேண்டும் அதற்கு தற்போதைய அரச தலைமையை மாற்றவேண்டும். இதுவே எமது அரசியல் சூனியத்தையும் மாற்றும். 

4. இன்று இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும், மன்னாரிலும், கொழும்பிலுமே வாக்களிக்கக்கூடிய சூழ்நிலையில் மக்கள் வாழ்கின்றார்கள். இவர்களில் சிலர் அச்சத்தாலும், அரசாங்கத்தின் சலுகைகளுக்காகவும் தற்போதைய அரச தலைவருக்கு வாக்களிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இதனை மிகநுணுக்கமாக மாற்றவேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம். ஆகவே இந்த நான்கு மாவட்டங்களிலும், ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடிய தகுதியுடையவர்களாக இருக்கும். இதில் ஒருஇலட்சம் வாக்காளர்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டு, மற்றும் தேர்தலை விரும்பாத மக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது விடலாம், மேலும் இதில் ஒருஇலட்சம் வாக்காளர்கள் அச்சுறுத்தலாலும், அற்பசெற்ப சலுகைகாகவும், குட்டிச்சாத்தானின் ஆதரவாளர்களும் தற்போதைய அரச தலைவருக்கு வாக்களிக்கலாம். மிகுதி மூன்று இலட்சம் தமிழ் மக்கள் எந்த வேட்பாளருக்கு (சரத்தா, மகிந்தா) தமது பொன்னான (இறைமையை) வாக்கையளிப்பார்களோ? அவரே அடுத்த சனாதிபதியாவார். இவ்விடயத்தில் எமது உறவுகள் தவறுவிடுவோமானால் விருப்பு வாக்கின் மூலம் தற்போதைய சனாதிபதி மீண்டும் கதிரையில் இருப்பதை எவராலும் தடுக்கவும் முடியாது.

இறுதிப்போரில் இறந்து போன எமது உறவுகளின் புதைகுழிகளை சர்வதேசம் பார்க்கவும் முடியாது, அவ்வாறு பார்க்கவிட்டாலும் புதைகுழியில் உடல் இருக்காது. அத்துடன் சிறையில் உள்ள எங்கள் உறவுகளின் நிலை என்ன? எனவே இலங்கை வாழ்தமிழ் வாக்காளர்கள் இதனை மறக்கவேண்டாம்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.