குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, கார்த்திகை(நளி) 21 ம் திகதி வியாழக் கிழமை .

முடக்கு வாதத்திற்கு மருந்தாகும் பவளப் பாறைகளின் எதிரி “சீவீட்”

31.05.2012-பவளப் பாறைகளுக்கு எதிரியாக உள்ள சீவீட் கடல் தாவரம், முடக்கு வாதத்தை குணப்படுத்தும் சக்தி கொண்டது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடல் பாசி வகையை சேர்ந்த தாவரம் சீவீட். இது நீரில் வேகமாக வளர கூடியது. அத்துடன் நீரின் தன்மையை பாதிக்க கூடியது.

கடல் வளம் என்று கூறப்படும் பவளப் பாறைகளை இத்தாவரம் பெருமளவில் அழித்து விடுகிறது. இதற்கு காரணம் சீவீடில் இருந்து வெளியேறும் ஒருவித ரசாயனம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே ரசாயனம் ஆர்த்தரிடிஸ் நோயை குணப்படுத்துவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் கெர்விக், ஜெனிஃபர் ஸ்மித் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. சீவீட் கடல் தாவரத்தின் மருத்துவ குணங்கள் பற்றிய ஆய்வு முடிவுகள், கெமிஸ்ட்ரி அண்ட் பயாலஜி என்ற இதழில் வெளியாகி உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, உலகம் முழுவதும் 350 மில்லியன் மக்கள், ஆர்த்தரிடிஸ் எனப்படும் முடக்குவாத நோயால் அவதிப்படுகின்றனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

படுக்கையில் முடங்கி வலியில் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீவீட் கடல் தாவரத்துக்கு இந்நோயை குணப்படுத்தும் சக்தி உள்ளது.

மேலும் ஏராளமான மருத்துவ குணங்களும் இத்தாவரத்தில் உள்ளன. ஹவாய் தீவில் அதிகளவில் சீவீட் கடல் தாவரம் காணப்படுகிறது.

அவற்றை ஆய்வு செய்ததில் பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. சீவீட்டில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தில் பல நோய்களுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

இதுகுறித்த விரிவான ஆய்வில் பல்வேறு அரிய பயன்பாடுகள் விரைவில் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.