குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆவணி(மடங்கல்) 9 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தேய்ந்து கொண்டு வரும் பூமியின் துணைக் கோளான சந்திரன் அதனால்தான் தமிழர்கள் அன்றே வளர்பிறை தேய்பிறை என்றனர்.

 

25.05.2012-நாம் வாழும் கிரகமான பூமியின் துணைக் கோள் சந்திரன் ஆகும். இக்கோள் வளர்ந்து தேய்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சந்திரன் ஒரு இயற்கையான செயற்கைகோள் என்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் உள்ள எல்.ஆர்.ஓ என்ற கமெரா துல்லியமாக படம் பிடித்து அடையாளம் காட்டியுள்ளது.

 

இதற்கு முன்னதாக அப்பல்லோ- 15, 16 மற்றும் 17 விண்வெளி பயணங்கள் மூலம் சந்திரனில் செங்குத்தான பாறைகள் மற்றம் நிலப்பரப்பு உள்ளது தெரியவந்தது. அவை 10 மீட்டர் உயரமும், பல கிலோ மீட்டர் நீளமும் கொண்டவையாக உள்ளன என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது சந்திரன் மிகவும் குளிர்ச்சியானது, அவற்றின் பாறைகள் சுருங்கி விரிவடையும் தன்மை உடையது போன்ற தகவல்கள் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நாசா விஞ்ஞானிகளின் ஆய்வுக் குழு தெரிவிக்கையில், சந்திரன் வளர்ந்து மீண்டும் தேயக்கூடிய தன்மை வாய்ந்தது. எனவே இது ஒரு செயல்படக்கூடிய கிரகம் தான். சந்திரன் பல அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.