குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

குடிமக்களின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட நிலநடுக்கப் பேரிடருக்கான பயிற்சி நடவடிக்கை

24.05.கி.ஆ2012 சுவிட்சர்லாந்தில் குடிமக்களின் பாதுகாப்பிற்காக மத்திய அலுவலகம் (FOCP) பேசெல் நகரின் அருகே ஒரு பயிற்சி நடவடிக்கையை மேற்கொண்டது. அதாவது 1356ம் ஆண்டு மத்திய ஐரோப்பாவில் 6.5 – 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது.

இது போன்றதொரு பேரிடர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் என்று நிலநடுக்க ஆய்வு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது இது போன்றதொரு பேரிடர் நிகழ்ந்தால் ஏற்படக்கூடிய அழிவுகள், தடுப்பு நடவடிக்கைகள் இதற்கு தேவைப்படும் மீட்புப்படையினரின் எண்ணிக்கை போன்றவை கணித்து அறிவதற்கான ஒரு பயிற்சி நடவடிக்கையை FOCP மேற்கொண்டது.

 

நிலநடுக்க ஆய்வியலாளர் கணிப்புப்படி இனியொரு நிலநடுக்கம் மத்திய ஐரோப்பாவில் ஏற்பட்டால் 6000 பேர் உயிரிழக்கலாம், 30,000 பேர் தொலைந்து போகலாம். 1600 பேர் மீட்புப்பணிக்கு தேவைப்படலாம். இந்த பயிற்சி நிலநடுக்கத்திற்கு Scismo – 12 என்று பெயரிட்டுள்ளனர்.

 

தீயணைப்புப்படை வீரரும் காவல்துறையினரும் நல்ல பயிற்சி பெற்றிருப்பது அவசியமாகும். எனவே அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக ஸீஸ்மோ – 12 பயிற்சி திட்டத்தின் இயக்குநர் ஹேன்ஸ் குகிஸ்பெர்க் தெரிவித்தார். இரு துறையினரும் ஒருவர் மீது மற்றவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இணைந்து செயல்பட வேண்டும்.

 

இந்த நம்பிக்கையை பேரிடர் ஏற்பட்ட பின்பு உருவாக்க இயலாது. இன்று முதல் இந்த நம்பிக்கையை இரு துறையினரிடமும் உருவாக்கி வளர்த்து சோதித்து மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் பேரிடர் காலத்தில் இருதுறையினரும் இணைந்த கரங்களோடு மீட்புப்பணியில் சாதனை புரிவர் என்றார் குகிசுபெர்க்.

 

சுவிசின் தொண்டு நிறுவனங்களிடம் 70 பில்லியன் சுவிஸ் பிராங்க் அதிகரிப்பு

 

சுவிட்சர்லாந்தின் சூரிச் மற்றும் பேசெல் பல்கலைக்கழகங்களின் ஆண்டறிக்கை, தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை விட அதிகரித்திருப்பதால் அவர்களிடமுள்ள நிதியும் 70 பில்லியன் சுவிசின் பிராங்க் மதிப்பும் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2010ம் ஆண்டில் தொண்டு நிறுவனங்களிடம் 50 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் மட்டுமே இருந்தது.

ஒவ்வொரு தொண்டு நிறுவனமும் சராசரியாக 6.2 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க் நிதி வைத்துள்ளது. ஆனால் பல நிறுவனங்கள் அளவில் சிறியதாகவும் பெரிய நிறுவனங்களால் ஊக்கமளிக்கப்படுவதாகவும் உள்ளன.

 

கடந்த 2011ம் ஆண்டில் பல நிறுவனங்களுக்கு அவர்களின் வைப்புத்தொகை முதலீடாக மாறி பலன் தரத் தொடங்கியது. இவை தங்களின் வைப்பு நிதியை முதலீடாகத் தக்க வைத்துக் கொள்ளவும் அதிலிருந்து வட்டி சார்ந்த வருமானத்தைப் பெறவும் திட்டமிட்டுள்ளன. தொண்டுப் பணிகளை நிறைவேற்றுவதில் தடங்கலோ, பொருளாதாரத் தடையோ ஏற்படக்கூடாது என்பதில் இந்நிறுவனங்கள் கவனமாகச் செயல்படுகின்றன.

 

பொதுவாக, தொண்டு நிறுவனங்களில் பணி செய்வோருக்கு ஆர்வம் தான் முதலீடே தவிர அவர்கள் சம்பளத்தை எதிர்பார்ப்பது கிடையாது. பணத்திற்காக வேலை செய்வது கிடையாது. ஆனால் தற்போது பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது குறித்து விவாதம் தோன்றியுள்ளது. இந்தத் தொண்டு நிறுவனங்களின் பணி 80,000 பேரின் முழுநேரப் பணிக்கு இணையானதாகும்.

 

இந்தத் தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் குறித்து எந்தப் பதிவேடும் பராமரிக்கப் படவில்லை. அவர்களின் நிதி நிலவரம் குறித்த கண்காணிப்பும் கிடையாது. தனிநபர் அன்பளிப்பு மட்டுமே சுவிஸ் தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 1.3 பில்லியன் சுவிஸ் பிராங்க் ஆகும். உதவித்தொகையாக வழங்கப்படும் நிதி ஆண்டொன்றுக்கு ஒன்று முதல் இரண்டு பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் ஆகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.