குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

உண்ணும் உணவில் மதமும் -சாதீயமும்

இந்து மதமானது மனித வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் தீண்டாமையை புகுத்தியுள்ளது. உண்ணும் உணவு, உடுக் கும் ஆடை, உறைவிடம், பொருளாதாரம், கல்வி  போன்றவைகளில்  இந்து மதத்தின் ஆளுமை  எவ்வாறு இருந்தன என்பதை மத ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். 2012 மே ஒன்றாம் நாள் இந்து நாளேட்டில் கல்பனா  கண்ணபிரான் அவர்கள் நாம் உண்ணும் உணவில் மதங்கள் மற்றும் சாதீயத்தின் ஆளுமையை விளக்கி யுள்ளார்.

கல்பனா கண்ணபிரானின் கட்டுரை சுருக்கமாகக் கீழே.

 

இந்தக்கட்டுரையை அவர் வெளியிட நேர்ந்ததின் காரணம் சில நாட்கள் முன்பு  ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக் கழகம் மாட்டிறைச்சி உணவுத் திருவிழா நடத்தியதும்   அதனை எதிர்த்து சில இயக்கங்கள் கூக்குரல் எழுப்பியதும்.

 

பன்முகத்தன்மை   கொண்ட நம் நாட்டில் உணவுப் பழக்கமும் பன்முகத் தன்மை வாய்ந்தது. உண்ணும் உணவுக் கும் புனிதத்துவம் கொடுக்கப் பட்டு சமூகத்தில் மேலோர் உண்ணும் உணவு கீழோர் உண்ணும் உணவு என்று வேறு படுத்தப் பட்டுள்ளது. காலங்காலமாக தலை யில் திணிக்கப்பட்ட  நம்பிக்கைகள் மற்றும் புனிதத்துவம்  என்ற கருத்துகள் உண்ணும் உணவிலும் வெளிப்படும்.

 

உணவு

என்ன காய்கறி உண்ணலாம் , டி    மாமிசம் உண்ணலாமா? வேண்டாமா?

 

 

எந்தெந்த மாமிசங்களை  உணவாகக் கருதலாம், டி    மாமிசங்களில்  சைவ மாமிசங்கள் எவையெவை.

 

 

விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்கள் சைவமா அசைவமா என்பவைகளை மத நம்பிக்கைகள் தான் முடிவு செய்யும்.

 

உண்ணுதல்

உணவைப் பற்றி பார்த்தோம் உண்ணுதலைப் பார்ப்போம்

 

 

யார் யார்  யாருடன் சேர்ந்து உண்ண லாம்?

 

 

உணவாக்கப் பட்ட விலங்கின் எந்தெந்த பகுதியை யார் யார் உண்ணலாம்?

 

 

உண்ணுதலில்  வரிசை முறை  --ஆண்/பெண், பெரியோர்/சிறியோர்,  சமூக அமைப்பில் உயர்ந்தவர்/ தாழ்ந்தவர் ஒரு பல்கலைக்கழக துணை வேந்தர், ஒரு  நீதியரசர்,  ஒரு கடைநிலை ஊழியர் யாவரும்  ஒன்றாக அமர்ந்து  உண்ணலாமா?  அதுவும் ஒரே உணவு வகைகளை உண்ணலாமா?

 

 

ஒரு தாழ்த்தப்பட்டவர்  எச்சில் உண வுக்குப் பதிலாக சூடாக பரிமாறப்படும் உணவினை உயர் ஜாதி வர்க்கத் தினரிடம் தைரியமாகக் கேட்க முடி யுமா?  இத் தருணத்தில் தலித் எழுத் தாளர் ஓம்பிரகாஷ் வால்மீகி படைத்த நூல் "ஜூதன் " நினைவுக்கு வருகிறது.

மேலும் இந்த ஜாதீய  அமைப்பில் ஒரு பார்ப்பனன் உணவை விழுங் கும் போது - சூத்திரன், மாதவிலக்கு உள்ள பெண்,  பன்றி மற்றும் நாய் அவன் கண்ணில் படக் கூடாது.

மதச்சார்பு உண்ணும் உணவிலும் புகுத்தப் பட்டுள்ளது. எந்தெந்த நாட்களில், நேரங்களில் மாதங்களில் என்னென்ன உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை, தான் சார்ந் துள்ள மதம் அறிவுறுத்தும்.

 

 

மாமிசத்துக்காக விலங்குகளை வெட் டுவதற்கும் மதம் சில வழிமுறை களைக் கூறுகின்றது.

 

 

அழுகின மாமிசத்தையே உண்ண வேண்டும் என்று சில ஜாதியினருக்கு விதிக்கப்பட்டுள்ளது. டி    சில சமூகத்தினர் மத விழாக்களில் மாமிசத்தைப் புறக்கணிப்பர், சில  சமூகத்தினர் விழாக்களில் மாமிசத்தை சேர்த்துக் கொள்வர்.

 

ஆந்திர மாநிலத்தில் சில ஜாதியினர் காடுகளில் புலி  விட்டுச் செல்லும் மிச்ச மாமிசத்தை உணவாகக் கொள்வர். புலி அவர்களுக்கு தேவையான உணவை விட்டுச் செல்லும் என்று நம்புகின்றனர். இப்பொழுது என் ( கட்டுரையாளருக்கு அல்ல) நினைவுக்கு வருவது தந்தை பெரியார் கூறியது. நாட்டில் வாழும் பார்ப்பனனை விட காட்டில் வாழும் கடும் புலி மேல் என்று.

 

உணவில் மனப்பாங்கு உணவின்  தூய்மை, வீரியம்,  ஊறு நிகழும் வாய்ப்பு, சுவை போன்றவை   ஒரு சமூகத்தின் பார்வையை ஆட் கொள் ளுகின்றது. விலங்குகளைக் கறிக்காக  வெட்டுவதை பார்க்க நேரிட்டால்  கறி உண்ணும்  பார்ப்பனர்கள் மற்றும் பயந் தாங்குளிகள் அருவருப்படையலாம்.

 

மேலும் விலங்குகள் உயிரிழக்கும் சூழல் --விலங்கின் தலை கால் ரத்தம் போன்றவை  பரவிக் கிடப்பது  மேலும்  வெறுப்பூட்டும்.. இந்து மத ஜாதி களில் பல படித் தட்டுகள் இருப்பது போல காய் கறிகளிலும் உள்ளன. உயர்ந்த ஜாதி காய்கறிகள்  தாழ்ந்த ஜாதிக் காய்கறிகள். என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.  புடலங்காய், பாகற்காய் போன்றவை  தாழ்ந்த ஜாதிக் காய்களாக பார்க்கப் படுகின்றன..  உண்பதிலும் சிலர் துற வறத்தை கடைப் பிடிக்கின்றனர். தான் மிகவும் அன்பு செலுத்திய யாரேனும் இறக்க நேரிட்டால் அவர் நினைவாக  தனக்குப் பிடித்தமான உணவை விட்டு விடுவதுண்டு.

 

மாறிய உணவுப் பழக்கம்

 

மாறிய உணவுப் பழக்கங்கள் பற்றி பல சரித்திரச் சான்றுகள்  உண்டு. எடுத் துக்காட்டாக பண்டைய வேதகால பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்டு வந்தனர். பிற்காலங்களில் தவிர்த்தனர்.

 

நம் நாட்டில் உண்ணப்படும் மாமிச வகைகள்

 

ஆடு, கோழி, மீன், சில கடல் வாழும் உயிரிகள், தவளை, வயல்எலி,  நாய், மான், பன்றி,  குரங்கு,  மாடு, எருமை,  சில பூச்சி வகைகள், சில பறவைகள், மேலும் பல  ஊர்வன மனிதர்களுக்கு தங்கள் உடல்களை மாமிசமாக வழங்கு கின்றன.

 

பிடித்த மற்றும் பிடிக்காத விலங்குகள் என்று  மத, ஜாதி, இன  சமூக அடிப்படையில் நிச்சயிக்கப் படுகின்றன

 

நம் நாட்டில் விருந்தோம்பலிலும்  அதன்  பன்முகத் தன்மை வெளிப்படு கிறது. உணவில் காணப் படும் பன்முகத் தன்மையில்   சில பண்பாட்டளர்கள்  மதரீதியான  அரசியலை புகுத்துகின் றனர். இதனால் மனக் கசப்பும் கல வரங்களும் உருவாகின்றன. அவரவர் மத அல்லது ஜாதி வழக்கப்படி சமைக்கப் படும்  உணவானது  எல்லா மதத் தினரைச் சார்ந்தவர்களுக்கும்  பரிமாறப் படுகிறது. நம் நாட்டில் மதக் கலவரத்துக்கு பயன் படும் மாமிசங்கள் --பன்றிக் கறியும், மாட்டுக் கறியும். இவை இரண்டும் பெரும்பாலானவர்களால் பன்னெடுங் காலமாக உண்ணப்படுகிறது. மாட்டுக் கறியினை இந்து அல்லாதவர்கள் உண்டு வருகின்றனர். ஆனால் இந்து மதத்தின் பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ள  பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களும் நீண்டகாலமாக உண்டு வரும் வழக்கம் உண்டு. இது மறுக்க முடியாத உண்மை . ஆனால் பெரும்பான்மை மதம் இந்த உண்மையை மறைக்க முயல்கின்றது.

 

பெரும்பான்மை  மதம் அதன் உட் பிரிவுகளில் உணவு பற்றிய தனது ஆளுமைக் கருத்துகளைத் திணித்தால் எதிர்ப்பும் வெறுப்பும் கிளம்பும். உணவு பன்முகத் தன்மையில் பாதிப்பை விளைவிக்கும்.

 

ஒரு விருந்தை ஏற்றுக் கொள்வதோ மறுப்பதோ தனி மனிதரின் உரிமை. அங்கு பரிமாறப் படும் உணவை ஏற்பதும் மறுப்பதும் கூட அவரின் தனி உரிமை..

 

சமீபத்தில் உஸ்மானியா பல்கலை கழகத்தில் நடந்த மாட்டுக் கறி விழாவில் யார் மீதும் மாட்டுக் கறி உண்ணும் படி கட்டாயப் படுத்தல் நிகழவில்லை. அந்த விருந்துக்குச் சென்றவர்களுக்கு மாட்டுக் கறி ஒன்றும் விலக்கபட்டதான உணவு என்ற உணர்வு இல்லை. விரும்பியே சென்றனர். விரும்பியே உண்டனர் அது சுய சிந்தனை மற்றும் ஒருங்கிணைப்பு நோக்கம் உள்ளவர்கள் கலந்து கொண்ட  விருந்தாகவே  அமைந்தது.

 

வெறுப்பை வளர்க்கின்றனர் என்று பெரும்பான்மை மதத்தினர் வழக்குத் தொடுப்பதில் அர்த்தம் ஒன்றுமில்லை. மேலும் பேராசிரியர்கள் மாணவர்களைத் தூண்டிவிடுகின்றனர் என்ற குற்றச் சாட்டுக்கும் பொருளில்லை. விருந்து படைப்பதை  வழக்காடு மன்றத்துக்கு எடுத்துச் செல்ல எந்த முகாந்திரமும் இல்லை. வழக்காடு மன்றமும் இதில் குறுக்கீடு செய்யவோ விசாரணை செய் யவோ அவசியம் இல்லை. ஏனெனில்  நீதி மன்றத்தில் மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஏராளமான வழக் குகள் அவர்களின் பார்வைக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றன..

 

கல்பனா கண்ணபிரான் அவர்கள் தற்போது ஹைதராபாத்தில் உள்ள " சமூக மேம்பாட்டுக் குழு"  (Council for Social Development)

வின் முனைவராகவும் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

 

- இந்து நாளேடு 01.05.2012 தகவல்: சி.நடராசன்