குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

முக்கியமானவை அறியவேண்டியவை

334: மகா அலெக்ஸாண்டரின் மெசிடோனிய படை பேர்சியவின் 3 ஆம் டேரியஸ் மன்னின் படையை தோற்கடித்தது.

1762: சுவீடனும் பிரஸ்யாவும் ஹம்பர்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1809: வியன்னாவுக்கு அருகில் நடைபெற்ற அஸ்பேர்ன் ஈஸ்லிங் யுத்தத்தில் நெப்போலியன் முதல் தடவையாக தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டார்.

1906: அமெரிக்காவில் ரைட் சகேதரர்கள் தமது 'பறக்கும் இயந்திரத்திற்கான' காப்புரிமையைப் பெற்றனர்.

1915: ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 227 பேர் பலி.

1958: இலங்கையில் இனக்கலவரம் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

1960: சிலியில் 9.5 ரிச்டர் அளவிலான பூகம்பம்  ஏற்பட்டது. சுமார் 6000 பேர் பலியாகினர்.  இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய பூகம்பம் இதுவாகும்.

1962: அமெரிக்காவில் விமானமொன்றில் குண்டு வெடித்ததால் 45பேர் பலியாகினர்.

1968: அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கியொன்று 99 பேருடன் கடலில் மூழ்கியது.

1972: இலங்கையில் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. இலங்கை குடியரசாகியது. சிலோன் எனும் அதன் பெயர் ஸ்ரீலங்காவாக மாற்றப்பட்டது.