குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழர்களின் சமயம் சைவசமயமா? இந்துசமயமா? 05.12.2009

தமிழ் மக்கள் தங்கள் மதமாக வைத்து  வழங்கி வருவது ஆரிய மதமாகிய இந்து மதமாகும். இவ் இந்து மதம் தமிழ் நாட்டில் பரவிய காலம் ஆரியர்கள் நம்நாட்டில் வந்து குடியேறிய காலத்தைக் குறிப்பதாகும். அதற்குமுன் இந்துமதம் தமிழரிடம் இருந்ததற்கு சான்றுகள் இல்லை. ஆகையால் ஆரிய மதமாகிய இந்து மதத்தை தமிழ் மக்களுடைய மதமென்றுகூற ஆராய்ச்சித்துறை கண்டஅறிவுடைய எவரும் முன்வரமாட்டார்கள் என்பது துணிபு. ஆரியர் தமிழரிடையே புகமுன்பே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறந்த நாகரீக வாழ்க்கையை செம்மை நெறியில் ஒழுகிவந்தனர். இடைக்காலத்தில் ஆரியர்களால் கொண்டு புகுத்தப்பட்ட இந்து மதம் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்பதை விளக்கவே இக்கட்டுரை கருவாகின்றது.

 

இந்துக்கள் யார்? அவர்களின்வாழ்க்கை கொள்கை என்ன என்பதை அறிவோம்.

இந்தியாவில் உள்ளவர்களின் மதம் என்பதால் இந்து என்றும், சிந்து நதிக்கரையில் ஆரியர்கள் தங்கி இருந்ததால் அவர்கள் இந்துக்கள் என்றும் இந்து மதத்தினர் என்றும் அழைக்கப்பெற்றனர் என்றும் மேற்சொன்ன இரண்டும் பொய் என்பதை ஒரு உபநிடதம் அதன் உண்மைப்பொருளை விளக்கித்தருகிறது.

"ஹிம்சாபாம் தூயதேயச,

ச:ஹிந்துரி த்யபிதீளதே"

எவன் துன்பத்தில் நின்று அல்லல் படுகின்றானோ,  அவன் இந்து என அழைக்கப்படுகின்றான் என்பதாகும் ஆரியர்கள் இருக்க இடமும்,  உடுக்க உடைளும், உண்ண உணவும் இன்றி ஊர் ஊராய்ச் சுற்றித்திரிந்து துன்பமுற்றதால் அவர்களை இந்துக்கள் என்று கூறும் உபநிடதக்கருத்தை நாமும் உண்மையெனக் கொள்ளலாம்.

தமிழர்கள் இப்படி இருந்ததாக வரலாறு இல்லை ஆரியர்களின் முதல் நுாலாகிய இருக்குவேத முதல் மண்டிலத்தில் உள்ள 42ம் பாகத்தில் ஆரியர்கள் தமது தலைவனான இந்திரனிடம் இப்படி வேண்டுகிறார்கள்.

 

1." யாகங்கள் வெல்வத்தை எளிதில் அடையுமாறு செய்"

2." புல்லடர்ந்திருக்கின்ற மேய்ச்சல் நிலங்களுக்கு எம்மை வழி காட்டிச் செலுத்து"

3." எங்களுக்கு வயிறு நிறைய உணவு கொடு,  எங்கள் உடம்பிற்கு உரம் ஏற்று" (இருக்கு01 ல்-33ம் பதிகம்)

4." சுவித்திராளின,  இழங்கன்றே,  ஓ மகவானே சுக்கிரனுடைய வீடுகளிடையே எங்களுக்கு நிலங்கிடைத்தல் வேண்டி கடந்த போரில் எங்களுக்கு உதவி செய்கின்றனை!

இதன்மூலம் ஆரியரின் இருண்ட துன்ப வாழ்வு தெளிவாகத்தெரிகிறது. வேத காலத்துக்குமுதலே தமிழர்கள் சிறந்த செல்வ வாழ்க்கையில் சிறந்திருந்தனர் என்பதற்கும் இருக்கு வேதமே சான்றாக உள்ளதைக்காண்போம்.

1."பொன்னணிகளாலும் மணிக்கலங்களாலும் தம்மை ஒப்பனை செய்து கொண்ட அவர்கள்(தமிழர்கள்) இந் நிலத்தை விரித்து ஓர் ஆடை விரித்தார்கள்"

 

ஈழத்தடிகளராரின் நுாலில் இருந்து பொ. முருகவேள் ஆசிரியர் ...... தொடரும்.....