குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

இலங்கையில் நடந்தது அன்று இராமாயணமாக ஆசியநாடுகளின் மொழி இலக்கியமானது முள்ளிவாய்க்காலின் கொலைக்கதைகள் முழுஉலகமொழிகளில் பரவுகிறது படமாகிறது!

முள்ளிவாய்க்காலுடன் தமிழன் இலங்கையில் அடக்கப்பட்டான் என்று அகங்காரம் கொண்டோர்

துள்ளிமித்தனர்  தீர்வு தேவையில்லை என்று  செருக்குடன் பேசிவந்தனர்.

பேச்சுக்கு சாட்டுக்கு தமிழர்களை அழைத்து அலைக்கழித்தனர் தமிழர்களும் நடித்தனர்.

தீர்வுக்குதிட்டமில்லாது ஒடுக்கும் சட்டங்கள்  பெருகின அட்டுழியங்கள் அதிகமாகின

உலகம் உண்மையை உணர்ந்தது யெனிவாவுக்கு வாருங்கள்  தீர்மான்க்கலாமென்றிருந்தது.

அங்கும் அகங்காரம் அரங்கெறியது தமிழர்நிலை துயரென்று அளவீடு கணிப்பானது

இந்தியாவின் உறக்கநிலையும் சற்று தளர்த்தப்பட்டது அதற்கு தமிழகம் காரணகாரியமானது

மேற்குலகம் மென்மையாய் தொடங்கியிருக்கிறது சற்று உரசல்களும் நிகழ்ந்திருக்கிறது.

இலங்கையில் நடந்தது அன்று  இராமாயணமாக  ஆசியநாடுகளின் மொழி    இலக்கியமானது

முள்ளிவாய்க்காலின் கொலைக்கதைகள்  முழுஉலகமொழிகளில் பரவுகிறது படமாகிறது!

உலகஅவையான ஐ.நா.சபையில் தீர்மானம்  அடாவடிகளுக்கு அவமானம் தீர்வின் சரியானஆரம்பம்

முள்ளிவாய்க்காலை மூடிமறைக்க டில்லிமுற்பட்டு தோல்விகண்டநிலை ஐ.நா.தீர்மானம்.

அதைத்தொடர்ந்தும் தமிழகம் கொந்தளித்துக்கொண்டுதான் இருக்கிறது வாலியின் வரிகளாகிறது

இலங்கையில் கொழும்பைவிட யாழப்பாணத்தைவிட முள்ளிவாய்கால் கிளிநொச்சி

தமிழகத்தில் தடம்பதித்துள்ளது மதுரை எரிந்ததால் தமிழகத்தில் சிலப்பதிகாரம் காப்பியம் பதிவாகியது.

முள்ளிவாய்க்காலில் தமிழர் உதிரம் உறைந்ததால் உயிர்கள்பிரிந்ததால் உறுப்புகள்சிதைந்தால்

இங்கிலாந்தில் காட்சியானது முள்ளிவாய்கால் பரணியின் போர்க்குற்றங்கள் சாட்சியாக அவைகளிலே

மறம்அன்றறுக்கும் அறம்நின்றறுக்கும் புலம்பேர்தமிழக்கைகள் இணையாது பிணக்குகளுடன்

உலகம் வெண்ணெய்யாய் திரண்டுவந்தாலும் தமிழத்தேசியப்பானை உடைந்கொண்டே இருக்குமோ!

முள்ளிவாய்காலின் முழக்கம்  முழுஉலகிலும் எதிரொலிக்கும் முடிவொன்று பிறக்கும்