குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிசு ஆல்ப்சு மலையின் அழகை மலையிலிருந்து இரசிக்க அரசு அனுமதி வழங்கியது

 

14.04.2012-சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்சு மலைகளின் அழகை மலையிலிருந்து பார்ப்பதற்காக ஒரு பார்வையாளர் மாடம் கட்டுவது குறித்து சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இப்போது சில மாற்றங்களுடன் இந்த மாடத்தைக் கட்டுவதற்கு அனுமதி தெரிவித்துள்ளனர். பெர்ன் மாநில அரசு, வியாழக்கிழமை அன்று மாடம் அமைப்பதற்கான திருத்தப்பட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்தப் பார்வையாளர் மாடம் பெர்னீசு ஓபெர்லாந்தில் உள்ள சுடாக்கார்ன் மலையின் உச்சியில் அமைக்கப்படும். முதலில் இங்கு கண்ணாடிக் கூண்டு மாதிரி பார்வையாளர்கள் சுற்றிலும் பார்ப்பதற்கு ஏற்ப வசதியாக அமைக்கப்படும்.

இந்த கூண்டில் விலங்கு, பறவைகள், வெயில், பனியிலிருந்து காத்துக் கொள்ள பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் அறிமுகமான போது சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் மலையுச்சிக்கு மனிதர்கள் செல்வதால் அங்கு வாழும் உயிரினங்களின் அமைதி கெட்டுப் போகும் என்று வாதிட்டனர்.

இப்போது ஒரு உள்ளூர் கேபிள் கார் நிறுவனம், பெரியதாக இந்தப் பார்வையாளர் மாடத்தை அமைக்காமல் மூன்று சதுர மீற்றர் பரப்பில் மிகச் சிறியதாக கட்டுவதற்கு அரசிடமிருந்து அனுமதி பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு இந்தப் பணி நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.