குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மும்பை தாக்குதலில் உயிரிழந்த ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த குண்டு துளைக்காத உடை எங்கே?

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தனது கணவரும், பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தலைவருமான ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த குண்டு துளைக்காத உடை எங்கே? என்று அவரது மனைவி கவிதா கர்கரே கேள்வி எழுப்பியுள்ளார். 

குண்டு துளைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது உடலில் குண்டு துளைக்காத உடை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியின் போது கவிதா கர்கரே இதைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது:

எனது கணவர் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்படும் போது அவர் குண்டு துளைக்காத உடையை அணிந்திருந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேனில் ஏற்றிய போதும் அவர் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்ததை மும்பை தாக்குதல் சம்பவத் தொலைக்காட்சி காட்சிகளில் காண முடிந்தது.

ஆனால் நான் அவரை மருத்துவமனையில் பார்க்கும்போது குண்டு துளைக்காத உடை இல்லை. எங்கே போனது அந்த உடை என்பது தெரியவில்லை.

அவர் இறந்து சில மாதங்கள் ஆன நிலையில் இந்தக் குண்டு துளைக்காத உடை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கோரியிருந்தேன். அதற்கு எனக்கு, "உடை தொலைந்துவிட்டது' என்ற ஒரே வரியில் பதில் கிடைத்துள்ளது. அந்த உடை எப்படி தொலைந்தது என்பது உள்ளிட்ட எவ்வித விளக்கமும் இல்லை என்றார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை காவலர்கள் கையாண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள கவிதா கர்கரே, பயங்கரவாதிகளை ஒடுக்க தனது கணவர் வேண்டுகோளுக்கு இணங்க வீரர்கள் அனுப்பிவைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் தாக்குதலை அறிந்ததுமே அவர்களை உயிருடன் பிடித்துவிட எனது கணவர் முயற்சித்துள்ளார். அதற்காகக் கூடுதல் போலீûஸக் கோரியுள்ளார். 40 நிமிடங்கள் வரை அவர் காத்திருந்தும் வீரர்கள் அனுப்பி வைக்கப்படவில்லை.

அவர் கேட்டத் தருணத்தில் காவலர்களை அனுப்பி வைத்திருந்தால் அஜ்மல் கசாப் மட்டுமன்றி தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளையும் உயிருடன் பிடித்திருக்க முடியும். அவர்களின் தாக்குதலை முறியடித்திருக்க முடியும் என்று கவிதா கர்கரே கூறினார்.

எனது கணவர் போலீஸ் துறையில் மிக உயர்ந்த அதிகாரி. அவர் நினைத்தால் ஏ.சி. அறைக்குள் அமர்ந்து கொண்டு காவலர்களுக்கு கட்டளை பிறப்பித்து அதை நிறைவேற்றவும் இயலும். ஆனால் அவர் தனது பணிக்காலத்தில் எப்போதுமே இப்படி நடந்து கொண்டதில்லை. எங்கு ஒரு பிரச்னை என்றாலும் அந்த இடத்தில் தான் முதலில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இறுதி மூச்சுவரை அதையே தனது கொள்கையாகக் கடைப்பிடித்தவர் என்று கவிதா கர்கரே கூறும்போது உணர்வுப்பூர்வமாக இருந்தது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.