குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

அணு ஆயுத குறைப்பு நடவடிக்கைக்காக முயற்சி மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு 'நோபல் பரிசு' வழங்கப்படுகிறது.

பொருளாதாரம், அறிவியல், உலக அமைதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு உலகின் உயரிய விருதான 'நோபல் பரிசு' வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.

 

இந்த ஆண்டுக்கான (2009) நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, தமிழரான விஞ்ஞானி ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

உலகின் அமைதிக்காக பாடுபடும் தலைவர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு, நேற்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த உயரிய விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக, நோபல் பரிசுக்கான தேர்வுக்குழு அறிவித்தது.

உலக சமாதானம் மற்றும் உலக நாடுகளில் அணு ஆயுத குறைப்பு நடவடிக்கைகளுக்காக பாடுபட்டதற்காக, ஒபாமாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற 9 மாதங்களில் ஒபாமாவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. ரூ.9 கோடி ரொக்கப்பணத்துடன் தங்கப்பதக்கம் கொண்ட இந்த பரிசு, வருகிற டிசம்பர் மாதம் 10-ந்Úதி அன்று ஒபாமாவுக்கு முறைப்படி வழங்கப்படும்.

"சர்வதேச நல்லுறவை மற்றும் உலக மக்கள் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிக்காக இந்த பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக'' நோபல் பரிசு குழு புகழாரம் சூட்டி உள்ளது. தனது அமைதி முயற்சியின் மூலம் உலக மக்களுக்கு வளமான வருங்காலத்துக்கான நம்பிக்கை ஊட்டியதாகவும், ஒபாமாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்ற 48 வயது ஒபாமா, அணு ஆயுத குறைப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே அமைதி நடவடிக்கையை மீண்டும் தொடங்குவதற்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

கடந்த மாதம் ஒபாமா தலைமையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அணு ஆயுத குறைப்புக்காக உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்து தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது ஏற்கனவே ரூஸ்வெல்ட் (1906), உட்ரோ வில்சன் (1919) ஆகியோருக்கு நோபல் பரிசு கிடைத்திருந்தது. 3-வதாக தற்போது ஒபாமாவுக்கு இந்த விருது கிடைத்து உள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டருக்கும் இந்த விருது கிடைத்து இருந்தது.

நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலில் 205 பேர் இடம் பெற்று இருந்தனர். இந்த விருதுக்கான பரிந்துரைக்கு கடைசி நாளான பிப்ரவரி 1-ந்தேதிக்கு 2 வாரத்திற்கு முன்பாகத்தான் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி ஏற்றார். இந்த நிலையில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமைதிக்கான விருதை தவிர மற்ற நோபல் பரிசுகள் அனைத்தும், 'ராயல் சுவீடன் அகாடமி' என்ற அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது. ஆனால், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும், விஞ்ஞானி நோபல் எழுதிய உயிலின்படி நார்வே நாட்டு பாராளுமன்றம் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் 5 பேர் கொண்ட குழுவினரால் வழங்கப்படுகிறது. நோபல் இறந்தபோது நார்வே, சுவீடன் ஆகிய இரு நாடுகளும் ஒரே மன்னரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டு இருந்தது.

வழக்கமாக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக (நள்ளிரவில்), விருது பெறப்போகிறவர்களுக்கு தேர்வுக்குழுவினர் போன் மூலம் தகவல் தெரிவிப்பார்கள். ஆனால், இந்த முறை ஒபாமாவுக்கு அதேபோல் நள்ளிரவில் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று, தேர்வுக்குழு தலைவர் ஜெக்லாண்ட் தெரிவித்தார்.

கடந்த காலங்களில், இதுபோன்ற தகவல் தெரிவிப்பதன் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, பரிசு பெற்றவர் மூலம் மற்றவர்களுக்கு இந்த தகவல் வெளியாகி இருப்பதாகவும் அதேபோல் இப்போதும் நடந்துவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு, நேற்று அதிகாலை 5 மணிக்கு (இந்திய நேரப்படி 2.30 மணி) நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வெளியானது. உடனே அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பத்திரிகை தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ், தூங்கிக்கொண்டு இருந்த ஒபாமாவை எழுப்பி மகிழ்ச்சியான இந்த தகவலை அவரிடம் தெரிவித்தார்.

நோபல் பரிசுக்காக அவர் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதை ஒபாமா தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். "உலகம் முழுவதிலும் உள்ள மக்கள், இந்த விருது அறிவிப்பால் வியப்பு அடைந்திருப்பது பற்றி கேட்டதற்கு, "எங்களுக்கும் அதே நிலைதான்'' என்று கிப்ஸ் பதில் அளித்தார்.

"விருதை பெறுவதற்காக ஒபாமா ஆஸ்லோவுக்கு நேரில் செல்வாரா?'' என்று கேட்டதற்கு, "விருதைப் பெறுவதற்காக ஒபாமா நேரில் செல்வார் என்று கருதுவதாக'' ஒபாமாவின் மூத்த ஆலோசகர் டேவிட் அக்சல்ராட் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

  • 2009 - அதிபர் ஒபாமா.
  • 2008 - பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மார்த்தி அதிசாரி.
  • 2007 - அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோர் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான அரசு குழு.
  • 2006 - முகமது யூனுஸ் மற்றும் வங்காள தேச கிராமிய வங்கி.
  • 2005 - சர்வதேச அணுசக்தி கழகம் மற்றும் அதன் தலைவர் முகமது எல்பராடி.
  • 2004 - கென்யா நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் வாங்கரி மாத்தாய்.
  • 2003 - ஈரான் நாட்டு மனித உரிமை பாதுகாப்பு வக்கீல் ஷிரின் எபாடி.
  • 2002 - அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர்.
  • 2001 - ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் தலைவராக இருந்த கோபி அனன்.
  • 2000 - தென் கொரிய ஜனாதிபதி கிம் மெ-ஜங்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.