குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பூநகரி மீது காதல் கொண்டு ஒற்றுமைக்கு சிலவரிகள்

நாம் பூநகரிச் செடிகளின் பூக்கள் ஒரே மரத்தின் கிளைகள்
கட்சியென்ற  கத்திகளால் வெட்டுண்டு வெவ்வேறு ஆகாது
என்றென்றும் ஒட்டுண்டு குழையல் சோறுண்டு வாழ்வோம்.

வெவ்வேறு கிளைகள் என்று எண்ணினாலும்

அடிமரம் ஒன்று என்று எண்ணுங்கள்
அது வாடியடி ஆலமரம் பலமான பலகாலமரம்.

அதன் கிளைகளும் விழுதுகளும் பல
அதன் ஆணிவேர் ஒன்று
அந்தவேர் பூநகர் என்ற வேர்.

உலகிற்கு சக்கரை(சீனி) அறிவித்த
கரும்புற்கள் (பனைகள்.)
ஈடுசெய்ய வந்தது கரும்பு

கரும்புல்லில் இருந்து வந்ததே
கரும்பு கருபிலிருந்து வந்ததே
இனிப்பென்ற இன்பமான சொல்லு.

நாம்கௌதாரி முனைப் பனைமரங்கள்
அந்த மண்குவியல்கள் வெறும்
மண்களல்ல தமிழினவரலாற்றுக் குவியல்கள்.

இதை அறிய எம்மிடம் அறிவியல் இல்லை
சான்றுகளை ஆதாரப்படுத்த அங்குள்ளோருக்கு
ஆர்வமுமில்லை அதை அறிந்துமில்லை.

பழைய தாளிகள் பழையநணயங்கள்
பழைய படையல் மடை முறை
வழிபாட்டு நிகழ்வுகளுடன் பெரும்படை

அந்தக்கடவுள் ஆணாபெண்ணா அறியமுடியாது
பலரையும் ஈர்த்து அருள்பாலிக்கும்
அம்மனென்பர் கண்ணனென்பர்.

தமிழர் திராவிடர் அம்மன் முறையினர்
ஆரியரான எதிரியானவர் கண்ணன் முறையினர்.
வேறுபாடு புரியாத புலம்பல்ளும் உண்டு.

நாம் சோலை வேரவில்,கிராஞ்சித் தென்னை மரங்கள்
முழங்காவிலின் வாழைமரங்கள்
குழாய்க்கிணற்று உழைப்பின் ஊற்றுக்கள்.

பத்தினிப்பாய் பாலைமரங்கள்
வெரவில் வெளித் தேக்குமரங்கள்

இரணைதீவு மீன்கள்

பல்லாய் சவுக்குமரங்கள்.

கொக்குடையான் வெளியில்
துள்ளி ஓடும் புள்ளி மான்கள்
தண்ணியில் துள்ளும் விலாங்குகள்.

பொன்னாவெளிப் ஆவின் பால்பருகிய ஆlட்கள்
பல்லவராயன் கட்டு குளத்தின் அணைக்கட்டுகள்
நாச்சிக்குடாவின் படகுகள்.

தும்புருவில்

(யெயபுரத்தின் )

வளமான வயல்கள்.

வாடியடிக் கோட்டைக் கற்கள்
அந்தஆலமரத்தின் விழுதுகள்
நல்லுார்க் கட்டுக்கரைக் காவடிகள்.

அத்தாய், நாலாங்கட்டை, பள்ளிக்குடா

மட்டுவில்நாடு ,வில்லடி,செட்டியகுறிச்சி,

தம்பிராய் அத்தனையும் அயற்கிராமங்கள்.

வெட்டினாலும் கொத்தினாலும் கொழுத்தினாலும்
மீண்டும் தளைக்கும் மிடுக்குடன் வளரும்
பெரும் காடுகள் படர்பற்றைகள்.

உயரிப்பிட்டி கள்ளிப்பிட்டி தோட்டவெளிகள்
கத்தரிக்காய் மிளகாய் மரக்கறிகள்.
கதிர்காமக் கந்தனமர்ந்த கரிக்கோட்டுக்குளக்காரர்.

பூநகரிக் காட்டு ஆனைகள்
நாம் செத்தாலும் ஆயிரம் பொற்காசு
சங்குப்பிட்டியின் சங்குகள் சுட்டாலும் நாம்வெண்மை.

நாம் சித்தங்குறிச்சியின் சித்தர்கள்
மடம் கட்டி வாழ்ந்த ஞானிகள்
நாம் குமரிநாட்டுக் குடிகள்.

தமிழ் இனத்தின் பூர்வீகங்கள்
நாகதீபம் என்ற வன்னியின்
வடநுனி நிலத்தினர் நாகர்.

நாம் உலகெங்கும் பெயர் போன பூநகரி
மொட்டைக்கறுப்பன் அரிசியின்
சொந்தக்காரர்கள்.

உங்கள் உழவு இயந்திங்கள்

ஓடும் ஒலியும் கேட்கிறது

பள்ளத்தில் விழுந்தேறும்போது

தகரமும்மரப்பலகையும்

கலகலக்கும்ஒலி ஊரின்

இசையாய்க் கேட்கிறது.

பள்ளிகளில் கற்றுக் கொடுத்தவர்கள்
வயல்களில் கடினமாய் உழைத்தவர்கள்
கறுக்காய்த் தீவுமக்கள்.

செல்லையாதீவில் செம்மையாய்

நெல்விளையம் ஆரியம்பொந்தில்

செத்தல்மிளகாய் காயும் ஆலங்கேணியில்

இராமன்களப்பில் உப்பு விளையம்

ஆடிமாதம் இப்போ பனங்காய்விழும்.

பினைந்து காயவைத்தா பனாட்டுவரும்

பனங்களியில் பனம்பிட்டு பலகாரம்

உண்டுமகிழ அங்கு சூழ்நிலைதான்

சரியில்லை.

பழையவாடியடிச் சந்தை மீண்டும் வரவேண்டும்.

மரக்கறிகளும் தேங்காயும் அரிசிகளும் குவியவேண்டும்

மீன்சந்தையில் மீன்களைப் பார்த்து தேர்ந்து முன்புபோல்

வாங்கும் வசதிகள் மீளவும்வரவேண்டும்.

கிளிநொச்சி மன்னார் யாழ்நகர்களுக்கு பேருந்துகள்

மணிக்கொன்று ஓடவேண்டும் மக்கள்வாழ்வுமலர

இவையங்கு நிகழக் கட்சிபேதமின்றி தெரிவானோர்

உழைக்கவேண்டும் அரசதரப்பு எதிர்த்தரப்பு எண்ணம்

எள்அளவும் இருக்காது பூநகரி என்றுஉழைக்கவேண்டும்.

வெளிஊர்களிலிருந்து வருவோரை அரவணைத்து

எம்மூருக்காய் ஊக்கமுடன் உழைக்கத் துாண்டவேண்டும்.

பணிமனைகள் அருகே தங்குவிடுதிகள் அமையவேண்டும்

அதனால் அவர்களின் கடமைகள் முழுமையடையவேண்டும்.

போக்குவரத்தும்  கல்விவசதிகளும் சுகாதாரவசதிகளும்

மீணடும்வரின் வராதபூநகரி மக்களும் உரிமைகோரிவருவர்

அரிசிஆலைகள் பெருகவேண்டும் யாழ்நகருக்கு அரிசிபோக

வசதியாய் சங்குப்பிட்டி கேரதீவு பாலம் இருக்கிறதே.

உள்ஊர்வீதிகள் பூநகரியாழ்வீதி பூநகரிகிளிநொச்சிவீதி

பூநகரிமன்னார்வீதி முன்னரைவிடச் செப்பனிடப்பட வேண்டும்.

பாலம்போட்டும் வீதிகள் திருத்தாமை கிணறுகட்டியவன்

வாளிபோடத கதையாய் சிரிப்புக்கிடமாய் பயன்பாட்டிற்கன்றி

விளம்பரத்திற்காய்  செய்யப்பட்டதாய்  மக்கள்கருதுகிறார்கள்.

தென்னந் தோட்டங்களில் அய்ந்துஆறு ஆண்டுகளில் மீண்டும்

தென்னையில் தேங்காய்கள் தொங்க வேண்டும்.

இதற்காய் உலகவங்களின் உதவிகளையாவது  பெற்றெடுக்கவேண்டும்.

போக்குவரத்து வசதி முன்புபோல் வளர்ச்சிபெறின்

எம்மூர்வளர்ச்சி தானே நிகழும் இது சத்தியம்.

பூநகரி பொன்னம்பலம்.முருகவேள் ஆசிரியர்..சுவிசு 19.07.2011

தொடரும்....