குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

யாழில்தீவகமக்கள் இனவிகிதாசாரத்தில் முன்னணியில்.வியாபாரத்தையும் காணிகளையும் கையகப்படுத்தினர்.

பூநகரி பொ.முருகவேள் ஆசிரியர். சுவிற்சர்லாந்து.11.01 தமிழாண்டு2043-- 25.01.கி.ஆ2012

அன்னியர்களின் போர்களும்   காட்டுப்பகுதியாக  இருந்தகாரணங்களால் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி கிழக்குமாகாணப்பகுதிகளில் சில இடங்களில் போர் காலத்திற்கு காலம் இடம் பெற்றமையால் மக்களும் ஊர்களும் அழிந்துபோன  எச்சங்கள் அங்கு இருக்கின்றது. மலேரியா நோய்த்தடுப்பு அறியப்படாமையும் ஒருகாரணம் போக்குவரத்து வீதி அமைப்புக் குறைபாடுகள் வியாபாரம் விவசாயத்துக்கு நீர் இருந்தாலும் குடிநீர் ஒரு பிரச்சனையாக இப்பொழுது போல் அப்போதும் இருந்துவந்தது. மூன்றில் ஒருபகுதி நிலம் தமிழர்களிடம் இருந்தது.  அபிவிருத்தி செய்யுங்கள் குடியேறுங்கள் என்றபோது  யாழப்பாணத்து மக்கள் யாழ்நகர வசதிகளை விட்டு வெளியேறி வன்னி நிலங்களைக் கையகப் படுத்தவில்லை இதனாலேதான் வெளிக்கிடடி விசுவமடுவிற்கு என்ற நாடகம் வந்தது. இத்தகைய எமது குறைபாடுகளை இன்று அனுபவிக்கின்றோம்.

 தீவகமக்கள் வளம்குறைந்த மண்ணில் வாழ்ந்தாலும் எல்லா வளங்களையும் மிகக்கடினமாக உழைத்து தாமும் வளர்ந்து தமிழினத்திற்கான  தேவைகளை தற்காத்தார்கள். கொழும்பளவில் வியாபாரத்தில் முன்னிலை வகித்தார்கள்.  தமிழர்களுக்கான பொருளாதார பலத்தை நிலை நாட்டினார்கள். பிற மாவட்டங்களில் காணிகளைத் தமதாக்கியதன்  மூலம் காணிகள் தமிழர்கள் உடமை ஆகியது. அதேபோன்று  அதிகமான  குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்களும் அவர்களே!. ஏனைய யாழ் ஊர் மக்களை விட அதிக சனத்தகை கொண்ட ஊராக புங்குடுதிவு பொன்ற ஊர்கள் திகழ்தமையால்  தமிழினப் பரம்பல் உலக நாடுகளிலும் அதிகம் இருக்கின்றது. இதை ஏனை மக்கள் புரிந்து பின்பற்றவேண்டும். அவஊர் மக்கள் போல்  எனைய தமிழர்களும் அந்தவிடயங்களில் திறனாகச் செயற் பட்டிருந்தால் தமிழர்களின் நிலங்களும் பொரளாதாரமும் பாதுகாப்பட்டிருக்கும். என்பதை யார் உணரப் போகின்றார்கள். திறனை மெச்ச மாட்டார்கள் தேடித்தேடி தீவார் என்று குறைமட்டும் கூறுவார்கள்.

சிங்களவர்களின் தரப்படுதலுக்கு முன் தமிழர்கள் எழுதாதரப்படுத்தல் சட்டத்தை உளரீதியில் வைத்திருந்து வந்தனர். அது எது? யாழ்ப்பாணந் தவிந்தவர்களை  உயர்வாக  ஏற்கமறுத்தமை!  சமநிலையில் கருதாமை இதனால்  தமிழத்தேச  ஒருமைப்பாடும் பல துறை வளர்சியும்  பரம்பவில்லை. கிழக்குமாகாண மலையக மக்களின் மன இணைவைத்தவிர்த்தது. இருந்தும் என்றும் இது பாடசாலை மட்டங்களிலிருந்து அரசபணிமனைகள் வரை உளரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தியது உண்மையே. இன்று வெளிநாடு களிலிருந்தும் கொழும்பு போன்ற இடங்களிலிருந்தும்  அரசுக்கும் தமக்கும் சாதகமான கருத்துக்களை  உருவாக்கிக் கொண்டு அதிகாரங்களில் இருக்கிறார்கள் யாழப்பாணத்திற்கு ஒவ்வாமைகளைச் செய்கிறார்கள்.இதனால் பாதிக்கப் பட்ட உளபாங்குடையோர்களே! கூர்ந்து கவனியுங்கள் விளங்கும்.

 இலங்கைத்தமிழர்களில்  குறைந்த நிலத்தில் இருந்து கொண்டு அதிக பிறப்பு விழுக்காட்டைக் கொண்டிருந்தவர்கள் தீவக மக்கள். அதற்குசாட்சி க.போ .இரத்தினம் அவர்களுக்கு விழுந்து கொண்டிருந்த வாக்குக்கள். கிளிநொச்சிக்கும் தீவகத்திலிருந்தும் மக்கள் குடியேறிமை  கிளிநொச்சி மாவட்டம் என்று ஒன்றை ஆனந்தசங்கரி அவர்கள் உருவாக்க காரணமாகவிருந்தது. இதனால் கல்வித்துறை வளர்ச்சிகண்டது சத்தியமூர்த்தி போன்ற மருத்துவத்துறையினரின் சேவையை உலகம் பராட்டி விருது கொடுக்கும் உயர்அளவிலான உதவி மனப்பான்மை இருந்தது. என்பது எல்லோரும் அறிந்தவிடயம். ஆனாலும் மாற்றர் மதிக்கும் உயர்பண்புகள்  இன்னும் தேவைப்படுகின்றது. 

 கிளிநொச்சி வளர்ச்சிகண்டது எவ்வாறு? கிளிநொச்சியை தனிமாவட்டம் ஆக்கியது சங்கரியின் தனியாற்றல்! 

போர்காலத்திலும் திட்டமிடல் அதிகாரியாகவும் அரசாங்க அதிகாரியாகவும் இருந்து செயற்பட்டவர் பூநகரி திரு.இராசநாயகம் அவர்கள்.

முற்காலத்தில் அரச ஆயுள்வேதவைத்தியராக இருந்து கிளிநொச்சி மாவட்டமக்கள் அனைவருக்கும் மருத்துவசேவையாற்றியவர் பூநகரி வைத்தியக்கலாநிதி  திரு.க.பொன்னம்பலம் அவர்கள்.

இன்று  கிளிநொச்சிக்கும் வன்நேரிக்குளம் போன்ற பகுதிகளுக்கும்  யாழப்பாண விவசாயிகளும்  வியாபாரத் துறையினரும் சென்றிருக்காவிட்டால் கிளிநொச்சி என்பது தமிழர்களால் அறியப்படாத பிரதேசமாகவே இருந்திருக்கும்.  கரைச்சியில்  முதலில் கிராமசபைத் தலைவராகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர். திரு வீ.ஆனந்தசங்கரி அவர்கள். அக்காலத்தில் முறுகண்டிச்சந்திபோன்று  நான்கு ஐந்து சிறுசிறு கடைகள் கொண்ட பேருந்து தரித்து நின்று செல்லும் இடமாக யாரும் கண்டுகொள்ளாத  இடமாக கிளிகொச்சி இருந்தது.

 இதற்கு முந்தியகாலத்தில் சுதந்திரகாலத்தில் பூநகரி உதவிஅரசாங்க அதிபர் நிர்வாகப்பிரிவிலேதான் கிளிநொச்சி என்பது இருந்தது. இதை நிர்வகித்த விதானையார் குடும்பம் போர்காலத்திற்கு முன்பு வரை துணுக்காயப் பிரதேசத்தில் இருந்துவந்தனர் இவர்களின் பிள்ளைகள் பரம்பரை பரம்பரையாக யாழ் இந்துவில் கல்விகற்றனர் இறுதியாக  1984-85 களில் மாணவமுதல்வர்களின் தலமை மாணவனாகவும் தேர்தலலில் தேர்வானவரும் திரு.சரவணபவான் அவர்கள். துணுக்காய் விதானையாரின் பேரன் ஆவார். அவரின் சகோதரர் கிரி அவர்களும் அங்கேதான் கல்விகற்றார்கள். இப்போஇவர்கள் எல்லாம் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் மாமா  செல்வம் அவர்கள் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்தார்..

இந்தக்காலத்தில் அரசபணிமனைகள் கிடையாது அரசாங்க வைத்தியசாலை கிடையாது.  பூநகரிகரியிலிருந்து வெள்ளையர் காலத்தில் யாழ் சென்று கற்று ஆயுள்வேதக்கல்லுாரியிலும் சிறந்த மருத்துவத்துறை வரிவுரையாளர்களிடமும் கற்ற  அமரர் திரு.கந்தர் பொன்னம்பலம் அவர்களே  பூநகரிகரியில் முதல்முதல் 1946 இல் அரசஅனுமதியுடன் இலவசமாக  பூநகரியில் வைத்த்தியசாலையை நிறுவினார். இதுவே கிளிநொச்சி மாவட்டத்தினல் முதல்முதல் தொடங்கிய அரசமருத்துவமனையாகும். அந்ததிறப்புவிழாவிற்கு யாழப்பாணத் திலிருந்து  யாழ் ஆயுள்வேதக்கல்லுாரியின் சிறப்பு விரிவுரையாளர்(தலமைவிரிவுரையாளர் இராசா மருத்துவர்) காரைநகரைப் பிறப்பிடமாகக்கொண்டவர் அப்போது யாழ்பெருமாள் கோவிலடியில் வாழ்ந்துவந்தவர். தோணியால் பயணம்செய்து நாகதேவன் துறையில்வந்து இறங்கி குதிரைவண்டிகளில் அழைத்துவரப்பட்டார். இதற்கான சமயவழிபாட்டுநிகழ்வுகளில் பங்கெடுப்பதற்று  பூநகரி வேதியர்களின்  அனுசரணையுடன் யாழ்நகரிலிருந்தும் வேதியர்கள் வந்தார்கள். என்று அணமையில் 104 அவது அகவையில் கலமான தியாகராசாச ஐயர்அவர்கள் கூறினார். அப்போது இசைக்கச்சேரிகளுடன்  பேரிகை இசையும் ஒரு நிகழ்வாக நடந்தாக அவர்கூறினார்.

அதன்பின்  அரசநிர்வாகத் தேர்வில் திரு வைத்தியக்கலாநிதி க.பொன்னம்பலம் அவர்கள்  கிளிநொச்சியில்  பூநகரியில் முதல்அரசவைதியர் ஆகின்றார். அக்காலத்தில் கிளிநொச்சியில் 10 ஏக்கர் காணிவினையோகம் அபிவிருத்திக்காக வழங்கப்படுகிறது. யாழநகரவாசிகள் வசதிபடைத்தவர்கள்  அவற்றை கையகப்படுத்தினார்கள்.

  இவர்களில் வடமராட்சியைச் சேர்ந்த ஐயனார் கடைஉரிமையாளரும் ஒருவர். இவர்கள் வறுமையான ஆளணிகளை  கொண்டுவந்து உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி பத்து பத்து ஏக்கர்நிலங்களில் நெற்செய்கை ஆரம்பமாகியது. இதனால் கணிசமான அளவு மக்கள் குடியேறினார்கள் இவர்களின் மருத்துவசேவையை  அன்று கவனித்துவந்தவர் வைத்தியக்கலாநிதி. திரு அமரர் க .பொன்னம்பலம் அவர்களே. அக்காலத்தில் கரைச்சித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களும் இணைந்து கரைச்சியிலும் கிளிநொச்சியிலும் முதலில் ஒவ்வோரு ஆயுள்வேதவைத்திய சாலையை திறந்து வைத்தியசேவையை வழங்கினார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிற்காலத்தில் பரந்தனிலும் கிளை வைத்தியசாலை திறக்கப்பட்டது. இவ்வைத்திய சாலைகளில் நோயாளர் பதிவாளர்களாரகளாக  மருந்துகலவையாளர்களாக பணியாற்றியவர்கள் பரந்தன்அமரர்.திரு. மகாலிங்கம்  அவர்கள் இன்றும் தர்மபுரத்தில் வசித்துவரும்  திரு.அரியமுருகேசு( பின்னர் ஆசிரியராகக் கடமையாற்றினார்.) அதேபோன்று மருந்துகலவையாளராகக் கடமையாற்றிய  பூநகரி திரு.மகேந்திரராசா அவர்கள் தற்போது கிளிநொச்சி கச்சேரியில் கணக்காளராக (லிகிதராகக்)கடமையாற்றி ஓய்வுபெற்றுவிட்டார்.

இவ்வாறு கிளிநொச்சியின் எழுச்சி பிறமாவட்டமக்களின் வருகையால் வளர்ச்சி கண்டது. இதற்கு இரணைமடுக்குளம் காரணம். அதனைப்பயன் படுத்திக்கொண்டு பாராளமன்ற உறுப்பினராக இருமுறை தேர்வான திரு ஆனந்தசங்கரி அவர்கள்.  கிளிநொச்சி மாவட்ட உயர்வில் அக்கறையாக விருந்தார். அதனைத் தொடர்ந்து .போர்க்காலத்தில் திட்டமிடல் அதிகாரியாகவும் கிளிநொச்சி அரசஅதிகாரியாகவும் இருந்து கிளிநொச்சியை அபிவிருத்தியில் வெற்றி பெறச் செய்தவர்  பூநகரியைச் சேர்ந்த திரு.திஇராசநாயகம் அவர்கள் என்பதை அனைவரும் அறிவர்.

அக்காலத்தில் மட்டுமல்ல அவர் சிறிமாகாலத்தில் கிளிநொச்சியின் சி.சு.கட்சியின் அமைப்பாளர் அதனால் அமரர் செல்லையா குமாரசூரியரின் தமிழச்சேவை மனப்பான்மையைப் பயன்படுத்தி கிளிநொச்சிச் சந்தையை உருவாக்கினார். சிறிமாஅர்களம் செல்லையா குமாரசூரியர் அவர்களம் கிளிநொச்சி சந்தையை திறந்துவைத்த வைபவம் 1977 கிளிநொச்சி றொட்டிக்கோ மைதானத்தில்  நிகழ்ந்தது 3000- முதல்5000 வரையான தமிழர்கள் ஒன்று கூடினர். இக்காலத்தில் கிளிநொச்சி சந்தை சிங்களவர்கள் மத்தியிலும் முசுலீங்கள் மத்தியிலும்  பிரபல்லயமானது. மிளகாய் அரிசி வாழைக்குலை  தேங்காய்க்கும் மரக்கறிவகைகளுக்கும் பேர்போன சந்தையாக இது இருந்தது. இதனால்  பூநகரிமுழங்காவில் விவசாயிகள் பெரிதும் நன்மை அடைந்தார்கள் இக்காலத்தில் தான்  பூநகரி வேரவில் பொன்னாவெளி கிராஞ்சி வலைப்பாட்டிற்கும் இரணைதீவிற்கான  போக்குவரத்துச் சேவையும்  அபிவிருத்தி அடைந்தது. அமரர் செல்லையா குமாரசூரியர் அவர்களின் முயற்சியால்  ஒரு பேருந்து  புதிதாகக் கிடைத்தது. இப்பகுதி மக்கள் பெரும் நன்மை அடைந்தனர்  இவையனைத்தும்   பூநகரி இராசநாயகம் அவரகளைச் சாரும்.

எனவே கிளிநொச்சியின் வளர்ச்சியில் கல்வி விருத்தியில் திரு.ஆனந்தசங்கரிஅவர்களையும் மருத்துவச் சேவையில் அமரர் திரு.வைத்தியக்கலாநிதி திரு. க.பொன்னம்பலம் அவர்களையும் அக்காலமக்கள் மறக்கமாட்டார்கள். அதேபோன்று இக்கால மக்கள் அறிந்திருக்கும் இராசநாயகம் அவர்களும் என்றே கூறலாம். இந்த விடயத்தை ஆராயும் போது இங்கு இருந்த  நுணுக்கம் மிகவும் திறமையானது. இது சிலநபர்களிடமும் சில குடும்பத்தினரிடமும் இரகசியமாகப் பேணப்பட்டுவந்தது.  பெரும்பான்மையினர் தமது நலன்களைக் கருத்தில் கொள்வார்கள் அதைவைத்து எமது பகுதியை முன்னேற்றுவது என்பதாகும்.  அவர்களின் திட்டங்கள் வெற்றி பெறாமல் இத்திட்டத்தை தமிழர் பிரதேச மாகப் பேணியமை திரு.வீ.ஆனந்தசங்கரி திரு.தி. இராசநாயகம்போன்ற இன்னும் பெயர் குறிப்பிட முடியாத  பூநகரி வாசிகளிடம் உண்டு.- எனவே கிளிநொச்சியை யார்  யார் வளர்த்தோம்  என்று பார்க்கையில் ஈழதேசத்திலே  வரலாற்றுத்தேச மான  பூநகரி மக்கள் தமது பகுதியில் இருந்து கொண்டு பல இடர்களுடன் காலாகாலமாக பல ஊர்மக்களை  வரவேற்று அவர்ளுக்குரிய இடங்களைக் கொடுத்து தானும் வளர்ந்து  மற்றவர்களையும் வாழவைத்திருகிறர்கள்த. என்ற உண்மையை  எல்லாக் கிளிநொச்சிவாழ்மக்களும் அறிவார்கள். இளையவர்களுக்கும் புதியவர்களுக்கும் இதுபுரியாமல் புயலாய் அலைவதில் ஒன்றுமில்லை.  இதே வேலைத்திட்டம்  முல்லைத்தீவிற்கும் தேவை எனவே புதிய திறமைசாலிகள்  பூநகரியின் நவீன திறமையும் பண்புமிக்க  ஆனந்தசங்கரிகளாக  நவீன பொன்னம்பலங்களாக  திறமைபண்புமிக்க இராசநாயகங்களாக உருவாகி முல்லைத்தீவை வளர்துக்காட்டுவது தமிழினத்திற்கு மிகப் பெரும் சேவையாகும். இதைவிடுத்து கரடிக்குப் பயந்தவன் மனைவியைவிட்டு மரததில் ஏறி நின்று கொண்டு  மனைவி கரடியுடன் போராடும் போது அந்தவீரத்தை அந்தத் திறனை தனதாக்கிய மாதிரி( ஆருடைய மனிசியென்று நினைத்தாய் கரடி அடியெடி பெட்டியால என்றானாம்) என்று மற்றவர் சேவையை தனதாக்காது புதியவற்றைச் செய்து  புதியதேசங்களை வளர்த்தெடுங்கள்.

 பூநகரி பொ.முருகவேள் ஆசிரியர். சுவிற்சர்லாந்து.11.01 தமிழாண்டு2043-- 25.01.கி.ஆ2012