குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மாற்றம் மாணவர்களிடத்தே மலர வேண்டும்- இந்துக் கல்லூரியில் கலாம் உரை 25.01.2012

25.01.2012- ஒரு அடிப்படை மாற்றத்தை மனமாற்றம் மட்டும் அல்ல குணமாற்றத்தை மாணவர்கள் மத்தியில் கொண்டு வரவேண்டும்.யாழ். இந்துக் கல்லூரி 121 வருடங்களாக கல்விப் பணியாற்றி வருகிறது. பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணிநேரம் ஆகும். இரவும் பகலும் நிகழ்கின்றன. அதே பூமி சூரியனைச் சுற்றுகின்றது. ஒரு சுற்றுச் சுற்றுவதற்கு ஒரு வருடமாகிறது. அதாவது இந்துக் கல்லூரியும் பூமியில் இருப்பதால் இது வரை 121முறை சூரியனைச் சுற்றிச் சுழன்று பல மாணவ நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளது இவ்வாறு யாழ். இந்துக் கல்லூரிக்கு புகழ்மாலை சூட்டினார் இந்திய முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம்.
 

யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த அப்துல் கலாம் யாழ். இந்துக் கல்லூரிக்குச் சென்றார். அங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். இந்துக் கல்லூரியில் அவர் ஆற்றிய உரை வருமாறு:
 
நண்பர்களே, யாழ். இந்துக் கல்லூரியில் வந்து நூற்றுக்கணக்கான மாணவர்களை சந்தித்து உரையாடக் கிடைத்த வாய்ப்புக்கு நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 1890இல் தொடங்கி இன்றைக்கு 122 ஆண்டுகளாக பல்லாயிரக் கணக்கான மாணவர்களை உருவாக்கிய பல பெருமை களைப் படைத்தது தான் இந்துக் கல்லூரி. அப்படிப்பட்ட நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது உங்கள் கல்லூரி 121 ஆண்டுகள் கல்விப் பணி செய்துள்ள ஒரு கல்லூரியில் இருக்கும் போது  அதன் பெருமை என்ன என்று நினைத்துப் பார்த்தேன். நினைக்க, நினைக்க, நம் பால் வெளியில் நடக்கும் நிகழ்ச்சியைப்பற்றி சொல்ல விரும்புகிறேன். நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் தெரியும். பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணிநேரம் ஆகும். இரவும் பகலும் நிகழ்கின்றன. அதே பூமி சூரியனைச் சுற்றுகின்றது. ஒரு சுற்றுச் சுற்றுவதற்கு ஒரு வருடமாகிறது. அதாவது இந்துக் கல்லூரி பூமியில் இருப்பதால் இது வரை 121முறை சூரியனைச் சுற்றிச் சுழன்று பல மாணவ நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளது.  அந்த மிகப் பெரிய கல்விப் பணிக்கு உங்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.  தமிழ் வழிக் கல்வி முறையையும் தமிழை வளர்க்கவும் கல்வியை தமிழ் மாணவர்களுக்கு கிடைக்கவும் இந்துக் கல்லூரி நிறுவுநர்களும் அவர்களுக்கு பின்பாக வந்த நிர்வாகிகளும் ஆசிரியர்களுக்கும் இந்துக் கல்லூரியிலே படித்துப் பயின்று உலகத்தில் பல்வேறு உயர்ந்த பதவியிலிருக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் இந் நாள் மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நண்பர்களே உங்களது எழுச்சி பெற்ற மனங்களைப் பார்க்கிறேன். உங்கள் உற்சாகத்தைப்பார்க்கிறேன். நீங்கள் எல்லோரும் வெற்றியடைய வளமான வாழ்வு பெற ஓர் சிறு கவிதை மூலம் என் கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். அந்தக் கவிதையின் தலைப்பு வாழ்வில் நான் பறந்துகொண்டே இருப்பேன் என்பதாகும். இதை எல்லோரும் என்னுடன் சேர்ந்து சொல்கிறீர்களா?
 
நான் பறந்து கொண்டே இருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்.
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களைச் செயற்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன் ஆகாய உச்சிதான் என் இலட்சியம்
பறப்பேன் பறப்பேன் வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்
 
பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய இலட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த இலட்சியத்தை அடைய என்ன செய்யவேண்டும். நீ யாராக இருந்தாலும் பராவாயில்லை. உன்னால் வெற்றியடைய முடியும். நன்றி நண்பர்களே.
 
2020ற்குள் வளமான நாட்டைக் காண்போம்
 
நண்பர்களே, உங்கள் அனைவரையும் பார்க்கும் போது எனது ஒரு அனுபவத்தைப் பகிந்து கொள்ள விரும்புகிறேன். அதைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். டூஞுச்ஞீ ஐணஞீடிச் 2020 அமைப்பு ஆச்சார்யா சுதர்சன்ஜி என்பவரால் ஆந்திர மாநிலத்தில் தொடங்கப்பட்டு இன்றைக்கு கிட்டத்தட்ட 4 மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள் மத்தியிலும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது. தொடக்கம் முதல் இன்று வரை ஆச்சார்யா சுதர்சன் தலைமையில் அமைந்த  "லீட் இந்தியா 2020' என்ற அமைப்பு பல லட்சக்கணக்கான மாணவர்களைச் சந்தித்து, நான் மாணவர்களுக்கு அளித்த 10 உறுதிமொழிகளில் இருந்து சிறப்புப் பயிற்சி அளிக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளித்து மாணவர்களைத் திறம்பட செயற்பட வழிநடத்தும் விதமாக மாணவர்களுக்கு அந்தப் பத்து உறுதிமொழிகளில் அதாவது கீழ்க்காண்ட வழிகளில் பன்முகப் பயிற்சி அளிக்கிறார்கள். அதாவது
 
உண்மைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக எப்படி வாழ்வது.


கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் எப்படி நடப்பது.


அடுத்தவர்களை மதிக்கவும், அடுத்தவர்களைப் பாராட்டும் பண்பை எப்படி வளர்த்துக்கொள்வது.


பெருமையுடன் எப்படி வாழ்வை எதிர்கொள்வது.


தன்னம்பிக்கையுடன் எப்படி வாழ்க்கையின் சவால்களை சமாளிப்பது.


பேச்சு மற்றும் தொடர்புத் திறனை எப்படி வளர்த்துக்கொள்வது.


கூடி உழைத்தால் எப்படி மிகப்பெரிய வெற்றியடையலாம் என்ற தத்துவத்தைப் புரிய வைப்பது.


 கற்பனைத் திறனுடன் கூடிய தலைமைப் பண்பை எப்படி வளர்த்துக் கொள்வது என்ற தனித்தன்மையை கற்றுத் தருவது.


கோபத்தையும், சோம்பலையும், சுயநல நோக்கையும் வெறுத்தால், எப்படி நாம் எல்லோராலும் விரும்பப்படுவோம், மதிக்கப் படுவோம் என்ற சிறப்பியல்பைக் கற்றுக்கொடுத்தல்.


நீ எனக்கு எதைக் கொடுப்பாய் என்ற எண்ணத்தை மாற்றி என்னால் எதைக் கொடுக்க முடியும் என்ற எண்ணத்தை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மனதில் விதைத்து அந்த நல்ல குணத்தை வளர்த்தல்.
இப்படிப்பட்ட சிறப்பியல்புகளை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களது வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முகமாக, ஆந்திரா உட்பட பல்வேறு மானிலங்களில் சிறப்புப் பயிற்சி அளித்து, கிட்டத்தட்ட 35 முதல் 50 சதவீத மாற்றத்தை ஏறத்தாள 10 இலட்சம் மாணவர்கள் மத்தியிலும், ஆயிரக்காணக்கான ஆசிரியர்களிடமும் கிட்டத்தட்ட 20 சதவீத முன்னேற்றத்தைக் கொண்டு வந்ததில் "லீட் இந்தியா 2020' அமைப்பு மிகப் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே அப்படிப்பட்ட ஒரு அடிப்படை மாற்றத்தை மனமாற்றம் மட்டும் அல்ல குணமாற்றத்தை மாணவர்கள் மத்தியில் கொண்டுவரவேண்டும்.  இந்தச் சிறப்புப் பயிற்சி இந்திய முழுமைக்கும் சென்றடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்துப்பகுதி மாணவர்களுக்கும், பள்ளிப்படிப்பை பாதியிலேய விட்டுச் சென்ற இளைஞர்களும் அடையும் விதத்தில் இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் என் விருப்பம். எனவே இதைப்போல் பல்வேறு வழிகளில் மாணவர்களையும் இளைஞர்களையும் சந்தித்து அவர்களை நாளைய வளர்ந்த இலங்கையை படைக்கும் வகையில் தயார் செய்யவேண்டும் என்பது தான் இலங்கையின் கல்வி இலட்சியமாகத் திகழ வேண்டும் என்றார்.