குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

சுவிட்சர்லாந்தின் அரசு உயர் அதிகாரிகள் நியமனம்

13.01.2012-சுவிட்சர்லாந்து புதிய அரசு அதிகாரிகளை தற்போது நியமனம் செய்து வருகிறது. வெளியுறவுத்துறை பீட்டர் மாரெரிடம்(Peter Maurer) இருந்து ரோசியருக்குக்(Rossier) கை மாறியுள்ளது. ரோசியர் இதற்கு முன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் குழு தலைவராய் பணியாற்றினார். 51 வயது நிரம்பிய ரோசியர் இனி 150 நாடுகளிலுள்ள சுவிசு துதுவர்களின் அலுவலப்பணிகளை நெறிப்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இவர் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் மத்திய சமூகப் பாதுகாப்புத் துறையின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சுவிசின் வெளியுறவு விவகாரங்களை இவர் நிர்வகிப்பார். பிரசுசல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சுவிசு அலுவலகத்தின் தலைவராகவும், ஒன்றியத்தின் சுவிசு பிரதிநிதியாகவும் ராபர்ட்டோ பால்சரெட்டி பொறுப்பேற்கிறார்.

இதற்கு முன்பு இவர் சுவிசு வெளியுறவுத் துறையின் பொதுச்செயலராக இருந்தார். செவ்வாய்க்கிழமை அன்று சுவிசு சனாதிபதிக்கான சுழல் பதவியை வகித்து வந்த ஈவ்லின் விட்மெர் சுவிட்சர்லாந்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு இப்பொறுப்பை பிரிட்டன் ரிச்சர்டு யோன்சு வகித்து வந்தார்.

புதிய சவால்களை சந்திக்கும் சுவிசு

சுவிட்சர்லாந்தின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக மத்திய வலது பகுத்தறிவுக் கட்சியைச் சேர்ந்த டிபீயர் புர்கால்டெர்(Didier Burkhalter) பதவியேற்றுள்ளார்.
மிக்கேலின் கேமி ரே ஒன்பதாண்டுகளாக இப்பொறுப்பில் இருந்து வெளியேறிய பிறகு புர்கால்டெர் வந்திருக்கிறார். எனவே இவரிடம் பொது மக்கள் கொள்கைரீதியாகவும் செயலாக்கத்திலும் நிறைய வேறுபாடுகளை எதிர்பார்க்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு கொள்வது பற்றி இரண்டு சாராருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இடதுசாரிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்கின்றனர். வலது சாரிகள் நின்று நிதானித்து செயல்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் வரி ஒப்பந்தம் மற்றும் நிறுவன ஒப்பந்தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைக்கும். என்னுடைய தனிப்பட்ட கருத்துப்படி ஐரோப்பிய ஒன்றியத்துடனான உலகளாவிய ஒப்பந்தங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திடுவதில் அவசரம் காட்டக்கூடாது. அவர்களின் நிர்ப்பந்தத்தையும் நமக்கு ஏற்படுத்தும் நெருக்கடியையும் புது அமைச்சர் எதிர்த்து நிற்க வேண்டும் என்று கிறிஸ்தவக் குடியரசுக் கட்சியின் பிர்மின் பிஸ்கோஃப் குறிப்பிட்டார்.

யூரோசெப்டிக் சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டோஃப் மோர்கேலி, ஐரோப்பிய ஒன்றியம் புதிய சட்டங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதனை எதிர்த்துச் செயல்படுவது தான் புதிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கான சவால் ஆகும்.
 
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.